ஒரு வருடத்திற்கு பிறகு பைரவா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!

0
877
vijaymass
vijaymass

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் படங்கள் எப்போதும் வசூல் சாதனைகளை படைத்து விடும். சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான சில மோசமான படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. இவரது படங்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மொழி மாநிலங்கலிலும் வெளியாகி வருகிறது.

actorvijay

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கேரள திரைப்பட வினியோகிஸ்தர்கள் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் இந்த படம் சற்று மந்தமாக தான் இருந்து வந்தது பின்னர் சில அரசியல் கட்சிகளின் இலவச மார்கெட்டிங் மூலம் இந்த படம் வசூல் சாதனையை படைத்தது.திரையிடபட்ட 3 நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது.

ஆனால் மெர்சல் படத்திற்கு முன்னாள் வெளியான பைரவா படம் படுதோல்வி அடைந்தது. தமிழகம் முழுவதும் வெளியான இந்த படம் , அண்டை மாநிலமான கேரளாவிலும் வெளியானது. கேரளாவிலும் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் இதனால் கேரளாவில் இந்த படமும் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கபட்டது ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவில் வசூல் செய்யவில்லை என்று கேரளா வினியோகிஸ்தர்கள் கூறியிருந்தனர்.

vijay

தற்போது இந்த படத்தை வெளியிட்டதான் மூலம் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ‘பைரவா’ படத்தின் வினியோகிஸ்தர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தற்போது விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில மாதத்தில் இந்த படம் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இந்த செய்தியால் விஜய் சற்று சிக்கலில் சிக்கியுள்ளார்.