தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ‘மகாராஜா’ படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளையும் செய்திருக்கிறது. இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ஆகும். சமீபத்தில் கூட இந்த படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 என்ற படத்தில் நடித்து இருந்தார்.
விஜய் சேதுபதி குறித்த தகவல்:
முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

ஏஸ் படம்:
இந்த படம் ஃபேன் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சாந்தனுவும் நடிக்க படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஏஸ்(ace). இந்த படத்தை ஆறுமுககுமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகை நடிகை ருக்மணி வசந்த், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி:
வருகிற 23ஆம் தேதி இந்த படம் திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்து கொண்டுள்ள விஜய் சேதுபதி, முதன் முதலில் வர்ணம் என்ற படத்தில் நடிப்பதற்கு என்னை ஆறுமுக குமார் சார்தான் ரெகமெண்ட் பண்ணார். அதை நான் எந்த காலத்துக்குமே மறக்க மாட்டேன். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நான் நடிப்பதாகவே இல்லை. வேறு ஒருவர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்துக்கும் என்னை ஆறுமுக குமார் சார் தான் ரெக்கமண்ட் பண்ணி இருந்தார். நம்மைப் பற்றி நமக்கே முழுதாக தெரியாத காலகட்டத்திலும் நம் மீது யாரோ ஒருவர் வைக்கிற நம்பிக்கை இருண்ட வீட்டில் அகல் விளக்கு ஏற்ற மாதிரி என்னோட வாழ்க்கையில் அந்த விளக்கை ஏத்தினவர் ஆறுமுக குமார் சார்.
https://www.youtube.com/watch?v=6WIRJVqRyjQ
சினிமா கேரியர் பற்றி சொன்னது:
எங்க அப்பாவோட கடைசி காலத்தில் தன் புள்ள உருப்படுமா? என்று கேட்டபோது வர்ணம் படத்தில் நடித்த புகைப்படத்தை அவருக்கு காண்பித்தேன். உன் பிள்ளைக்கு நடிக்க வருது, நல்லா வந்துருவேன்னு சொன்னேன். அதனால் எனக்கு நடிக்க சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்ததற்கு நன்றி சார். சில பேரை எனக்கு பார்த்தவுடனே பிடிக்கும். ஆனால், சில பேரை பிடிக்காது. அந்த மாதிரி இந்த படத்தோட இசையமைப்பாளர் ஜஸ்டினை பார்த்தவுடனே பிடித்து விட்டது. ரொம்ப சூப்பராக இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல் நடிகை ருக்மணி வசந்த், தன்னுடைய சீன் என்ன? என்ன வேலை? அதை எப்படி பண்ணனும் என்று ஆழமாக புரிந்து கொண்டு ரொம்ப சின்சியராக வேலை பார்க்கக் கூடிய ஒரு நடிகை என்று கூறியிருக்கிறார்.






