தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரம் தான் தளபதி விஜய். இவருக்கும் தன் ரசிகை சங்கீதாவிற்கும் 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சங்கீதா லண்டனை சேர்ந்தவர்.
இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்தமகன் சஞ்சய் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.? சஞ்சய் ஆகஸ்ட் 26ஆம் தேதி 2000ஆம் ஆண்டு பிறந்தவர்.
சிறு வயதில் இருந்தே நடிக்க அவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. இதனால் 2009ல் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் தனது அப்பா விஜயுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருப்பார். அது தான் அவரது முதல் படம்.
சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் சர்வதேர் பள்ளியில் தான் படித்து வருகிறார். இந்த பள்ளியில் படித்து வருபவர்கள் அனைவருமே பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் ஆவார். 10ஆம் வகுப்பில் சஞ்சய் அதிக மார்க் எடுத்தார் என்பது வதந்தி தான்.
தற்போது கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் சஞ்சைக்கு தனியாக ஒரு கிரிக்கெட் கோச் வைத்து அவருக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுகிறார் விஜய். தற்போது 17 வயதாகும் சஞ்சய் இன்னும் சில வருடங்களில் தமிழக ரஞ்சி அணியில் ஆட வாய்ப்புகள் அதிகம்.