மணிரத்னம் படத்தில் நடிக்க நான் மறுத்தேனா?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விக்ரம்

0
447
- Advertisement -

‘பாம்பே’ பட வாய்ப்பை தான் தவறவிட்டதை குறித்து நடிகர் விக்ரம் கூறியிருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். சமீபகாலமாக காலமாக இவர் நடித்த அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் ‘தங்கலான்’.

-விளம்பரம்-

கேஜிஎஃப் இல் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரமோடு இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

தங்கலான்:

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து இந்தியாவிலுள்ள வடமாநிலங்களிலும் இப்படம் வெளியாக உள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தான் நடிகர் விக்ரம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விக்ரம், சினிமாவில் தான் தொடக்க காலத்தில் செய்த தவறு ஒன்றை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

விக்ரம் பேட்டி:

அதாவது 1990 இல், ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த விக்ரம், இயக்குனர் மணிரத்தினத்தின் ‘பாம்பே’ படத்தை தான் தவறவிட்டது பற்றி பேசியுள்ளார். அதில், நான் பாம்பே படத்தில் நடிக்க மறுத்ததாக வதந்திகள் வந்தன. ஆனால், அந்தப் படத்தில் நடிக்க நான் மறுக்கவில்லை. முதலில் அந்த படத்தில் நடிக்க நான் தான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், கடைசி கட்ட ஆடிஷனில் நான் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன்.

-விளம்பரம்-

பாம்பே குறித்து:

மேலும் அவர், அப்போது மணி சார் கையில் ஸ்டில் கேமரா இருந்தது. ‘ஒரு பெண் ஓடுகிறாள், அவளைப் பார்த்து உறைந்து போய் நிற்க வேண்டும்’ என்ற காட்சியை சொல்லி என்னை அடிக்க சொன்னார். பின்னர், ‘நிறுத்தாமல் கண்டினியூவாக நடிங்க’ என்று சொன்னார். அப்போது நான், மணிசார் கையில் வீடியோ கேமரா இல்லையே, நான் ஏன் நடிக்க வேண்டும் என்று குழம்பி விட்டேன். ஆனால், நான் நடித்தால் தான் அவரால் பிலர்ரான புகைப்படத்தை எடுக்க முடியும் என்பதை கடைசியில் தான் எனக்கு புரிந்தது.

தவறவிட்ட படம்:

தொடர்ந்து பேசிய அவர், மணி சாருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பதே என் கனவு. ‌ அவருடன் ஒரு படத்தை முடித்து விட்டால் கூட போதும், அதற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டாலும் சரி என்று நினைத்தேன். ஆனால், அப்போது ஃபோட்டோ ஷூட்டிங்கில் சொதப்பியதால் நான் தினமும் அழுது கொண்டிருந்தேன். ஆனால், அந்தப் படம் இந்திய அளவில் ஹிட்டானதுடன் இன்றும் கல்ட் படமாக நிலைத்திருக்கிறது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். பாம்பே பட வாய்ப்பு தவறவிட்டாலும், அதற்குப் பிறகு மணிரத்தினத்துடன் இணைந்து விக்ரம் ராவணன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement