‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. சமீபகாலமாக ‘தங்கலான்’ படம் குறித்து செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் ‘தங்கலான்’. கேஜிஎஃப் இல் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் உடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
தங்கலான் இசை வெளியீட்டு விழா:
குறிப்பாக, இந்த விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். படம் அனுபவம் குறித்து இந்த விழாவில் படக்குழுவினர் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது விழாவில் பேசிய நடிகர் விக்ரம், தங்கலானுக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குனர் ரஞ்சித்துக்கு நன்றி. இந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரை நினைத்தால் உடம்பெல்லாம் வலிக்கிறது. அந்த அளவிற்கு பெண்ட் கிளப்பி விட்டார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை நீங்கள் பார்க்க மாட்டீங்க, கேட்பீங்க.
விழாவில் விக்ரம் சொன்னது:
அது தான் ஜி.வி பிரகாஷோட இசை. நடிகர் பசுபதி உடன் இது எனக்கு ஆறாவது படம். தூள் படத்தில் ஆரம்பித்த இந்த பயணம் இப்போது தங்கலான் வரைக்கும் வந்திருக்கிறது. இவர் என் மகன் துருவ் உடனும் நடிக்கிறார். மேலும், நடிகை மாளவிகா ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். ரஞ்சித் படங்கள் என்றாலே பெண்கள் ரொம்பவே திடமாக இருப்பார்கள். நடிகர் டேனியல் இடம் புரமோஷன் தாண்டி எங்க கூட முதல் நாள் காட்சிக்கு வாங்க என்று கூப்பிட்டேன்.
சினிமா அனுபவம் குறித்து சொன்னது:
அப்பதான் நாங்கள் எப்படி சினிமாவை கொண்டாடுகிறோம் என்று தெரியும்னு சொன்னேன். ரஞ்சித், தங்கலான் படத்தை ஓவியம் மாதிரி பண்ணி இருக்கிறார். சேது, பிதாமகன், இராவணன், ஐ படத்தோட கஷ்டங்களை இந்த படத்தோடு ஒப்பிடும்போது 8 சதவீதம் கூட கிடையாது. சின்ன வயதிலேயே நான் சினிமா தான் வாழ்க்கை என்று முடிவு செய்தேன். இதனால் நான் சரியா படிக்கவில்லை. நாடகத்தில் கூட சவாலான கதாபாத்திரங்களை எடுத்து தான் நடிப்பேன். நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும்.
வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம்:
ஒரு முறை என்னுடைய கால் எதிர்பாராதவிதமாக உடைந்தது. என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் எனக்குள் நடிக்கணும் என்ற வெறி இருந்தது. அப்போது நான் இரண்டு கையிலும் குச்சி வைத்துக்கொண்டு மூன்று வருஷம் நடந்தேன். இந்த மூன்று வருடத்தில் 23 சர்ஜரி செய்தேன். குச்சி வைத்துக் கொண்டு தான் வேலைக்கும் போவேன். அப்போ, 750 ரூபாய் தான் சம்பளம். எனக்கு நடிக்கணும் என்ற வெறி இருந்து கொண்டே இருந்தது. கனவை நோக்கி ஓடினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இன்னைக்கு நான் நடிகர் ஆகவில்லை என்றாலும் நடிப்பதற்கு முயற்சி பண்ணிக் கொண்டே இருந்திருப்பேன் என்று ரொம்ப உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார்.