திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கட்ட விக்ரம் – அவருக்கு நடக்க இருக்கும் அறுவை சிகிச்சை குறித்து தெரிவித்த அவரின் மேனேஜர்.

0
401
vikram
- Advertisement -

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய நடிப்பிற்கு தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : பெயர்களில் தொடர்ந்து தவறு செய்யும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு. விமர்சிக்கும் ரசிகர்கள்.

கோப்ரா படம்:

இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தமிழ் சினிமா உலகில் சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோரின் சாதனைகளை( கெட்டப்) மிஞ்சும் வகையில் விக்ரம் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், நவராத்திரி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கோப்ரா படம் பற்றிய தகவல்:

அதே போல 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தசாவதாரம் படத்தில் கமலஹாசன் அவர்கள் பத்து விதமான கெட்டப்பில் தோன்றி இருப்பார். தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார் என்று கூறபடுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

விக்ரம்- பா. ரஞ்சித் கூட்டணி:

மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விக்ரம்- பா. ரஞ்சித் கூட்டணி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வர இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விக்ரம் மாரடைப்பு :

நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விக்ரமின் உடல் நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரின் மேலாளர் சூர்ய நாராயணன் ‘விக்ரமுக்கு லேசான மார்பு அசவுகரியம் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம். இந்த நேரத்தில் அவருக்கும் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement