எல்லாத்துக்கும் நான் தான் காரணம் ? காமெடி நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம் !

0
2231
Soori-actor

சியான் விக்ரம் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக வசூல் சாதனை படைத்து வருகிறது.

sketch

ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழு அண்மையில் வெற்றிவிழா கொண்டாடினர். அதில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார்.நடிகர் விக்ரம் எப்போதும் தன்னுடன் இணைந்து பணியாற்றும் நடிகர்களிடம் மிகவும் ஜாலியாக பழக கூடியவர்.

அவருடைய பேட்டிகள் பார்த்தாலும் கலகலப்பாக இருக்கும்.அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசும்போது ‘ நான் நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் படத்தில் அவருடைய காட்சிகள் நிறைய இடம்பெறவில்லை. இதனால் நான் மிகவும் வருத்தப்படுவதாக நடிகர் விக்ரம் தெரிவித்தார். இந்த படத்தில் நிறைய சீனில் சூரி வர வேண்டி இருந்தது. ஆனால், படத்தில் அந்த காட்சிகள் தேவையற்றது போல இருந்ததால், நான் தான் எடுக்க கூறினேன். சூரியும் சரி என கூறிவிட்டார். அடுத்த படத்தில் சூரி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் நான் அவருடன் காமெடியனாக நடிக்கிறேன். இல்லை என்றால் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறோம் என கூறினார்.

Actor-Soori

அவர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதும் போவதும் கூட தெரியாது. பெரிய நடிகர் என்ற என்ற எண்ணம் அவரிடம் இருக்கது. மிகவும் அமைதியானவர் சூரி எனக் கூறினார் விக்ரம்.

அடுத்து சூரி நாயகனாக நடித்தால் அந்த படத்தில் நான் காமெடி நடிகராக நடிக்க தயார் என்று நிகழ்ச்சியில் பேசும்போது நடிகர் சியான் விக்ரம் கூரியுள்ளார்.