கடந்த சில நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்க விவகாரத்தில் நடிகர் விஷால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் பதவி விலக கோரி தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சக தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தினர் இதனால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்க: சங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடிகிட்ட கொடுக்கணும்..!நடிகர் எஸ் வி சேகர் ஆவேசம்..!
விஷால் 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், பதிவிக்காலம் முடிந்தும் விஷால் தலைவராக இருப்பதை எதிர்த்து ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சங்கத்திற்கு போடபட்ட பூட்டை அகற்ற இன்று காலை நேரடியாக அலுவலகத்திற்கு சென்றிருந்தார் விஷால்.
அங்கு ஏற்பளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷாலை அவர்கள் தடுத்து நிறுத்தினார். பின்னர் போலீசாரிடம் திருட்டு பூட்டை அகற்ற கோரிக்கையை முன்வைத்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த வாக்குவாதிற்கு பின்னர் நடிகர் விஷால் மற்றும் மண்சூர் அலிகான் கைது செய்யப்பட்டனர்.





