கேப்டன் விஜயகாந்த் இறப்பு குறித்து கண்ணீர் விட்டு நடிகர் விஷால் பதிவிட்டு இருக்கும் இரங்கல் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜயகாந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.
இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து இருந்தார்கள்.
விஜயகாந்த் உடல்நிலை:
கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி இருந்தது. பின் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று பேட்டி அளித்து இருந்தார். மேலும், கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவிற்கு தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
கேப்டன் மறைவு:
இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலமானார் என்று மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஷால் வீடியோ:
இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் விஷால் கேப்டன் இறப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், கேப்டன் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்று நான் கேள்விப்பட்டேன். அண்ணே, என்னை மன்னித்து விடுங்கள். இந்த நேரத்தில் நான் உங்கள் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். நான் வெளிநாட்டில் இருக்கிறேன். உங்களுடைய பக்கத்தில் இருந்து ஒரு முறை உங்கள் முகத்தை பார்த்து உங்கள் காலை தொட்டு கும்பிட்டு இருக்க வேண்டும். நான் இல்லாதது என்னுடைய தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள். நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதை எங்கள் போன்ற ஆட்கள் எல்லாம் செய்வது சாதாரணம்.
விஜயகாந்த் குறித்து சொன்னது:
உங்கள் அலுவலகத்திற்கு யாராவது வந்தால் சோறு போட்டு தான் அனுப்பிவீர்கள். அதை நான் உங்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். ஒரு அரசியல்வாதி, நடிகர், நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி என்பதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதரை நாங்கள் இழந்து விட்டோம். இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. நல்ல ஒரு மனிதர் என்று பெயர் வாங்குவது சாதாரண விஷயம் இல்லை. சில பேருக்கு தான் அந்த பேர் நீடிக்கும். சத்தியமாக சொல்கிறேன் நான் உங்களுடன் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும். உங்களுடைய பெயரில் உங்கள் பணியை நான் செய்வேன் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.