விஷாலின் உடல்நலம் தொடர்பான சர்ச்சைகளுக்கு அவருடைய மேலாளர் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக விஷாலின் உடல்நிலை குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இதுதான் இவர்களுடைய முதல் படம். ஆனால், இவர்களுடைய கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு ஆம்பள படம் 2019 ஆம் ஆண்டு ஆக்சன் ஆகிய படங்களெல்லாம் வெளியாகியிருந்தது.

இந்த இரண்டு படங்களுமே காமெடி ஜானரில் இயக்குனர் சுந்தர்.சி கொடுத்திருந்தார். இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் விஷால், மை டியர் லவ்வர் என்ற பாடலை பாடி இருந்தார்.
மதகஜராஜா படம்:
அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு முன்பு தயாரித்த படங்களை விநியோகம் செய்வதில் சிக்கல் இருந்ததில் சில பிரச்சனை ஏற்பட்டதால் மதகஜராஜா படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. கடந்த சில ஆண்டுகள் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் மதகஜராஜா ரிலீசுக்கு தயாராக இருப்பதாக பேச்சுகள் வந்தது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

விஷால் உடல்நிலை:
12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் இயக்குனர் சுந்தர்.சி, விஷால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, குஷ்பூ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது.

அப்போலோ அறிக்கை:
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருக்கிறார்கள். உண்மையில் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் வந்திருக்கிறது என்று கூறி இருந்தார்கள். இருந்தாலுமே விஷாலின் உடல்நலம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. இதை அடுத்து விஷாலுக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாகவும், அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவர் கைப்பட எழுதி தந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள். அதோடு விஷால் தன்னுடைய வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விஷால் மேலாளர் விளக்கம்:
இப்படி இருக்கும் நிலையில் விஷால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன், நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுக்கப்பட்டு வருகிறார் என்று சொல்வதெல்லாம் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டில் இருந்து தான் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட அவர் காய்ச்சல் வந்த காரணத்தினால் தான் அவருடைய உடலில் நடுக்கம் ஏற்பட்டிருந்தது. அவர் பூரண நலமுடன் தான் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் அவர் முழுமையாக குணமாகி விடுவார் என்று கூறியிருக்கிறார்.






