15 தேதிக்குள்ள இத செஞ்சிடுங்க இல்லனா தியேட்டரில் படம் வெளிவராது..!திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷால் அதிரடி…!

0
3
Vishal
- Advertisement -

தமிழ் சினிமா துறையில் நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக செய்யப்பட்ட பின்னர் எண்ணற்ற அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் அவர் முக்கிய கவனம் செலுத்துவது திருட்டு முறையில் படத்தை வெளிவிடுவதை தடுப்பது தான்.

Vishal

விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவரான பின்னர் திரைப்படங்களை திருட்டு முறையில் வெளியிடும் கும்பலையும் இணையதளத்தின் மூலமாக படங்களை வெளியிடும் கும்பலையும் தடுக்க தீவிரமாக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இதன் முதன் கட்டமாக திரையரங்கு மூலமாக திருட்டு தனமாக படங்கள் வெளியாவதை தடுக்க கடந்த ஆக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்க உரிமையாளர்களை சந்தித்து அவர்களுக்கு சில கட்டளைகளையும் விதித்தார். அவை

1.அணைத்து திரையரங்குகளும் திரையரங்கு உள் இருக்கும் திரைக்கு முன்பாகவும் திரையரங்கின் இரண்டு புறமும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். இதனை வரும் தீபாவளிக்கு முன்னதாக செய்ய வேண்டும்.

2. பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 24/7 மணி நேரமும் செயல்பட வேண்டும். அது அனைத்து காட்சிகளையும் பதிவு செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.

3. திரையரங்குகளில் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படாத திரையரங்குகளில் எந்த ஒரு புதிய படமும் வெளியிடபடமாட்டாது.

4. திரையரங்கில் பணிபுரியும் இரண்டு நபர்கள் யாராவது திருட்டு தனமாக ரெக்கார்ட் செய்கின்றனரா என்று திரையரங்கை எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

5.திரைப்படம் ஒளிபரப்பபடுவதற்கு முன்னர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு ஆவான படம் ஒன்று ஒளிபரப்பபடும்.

6. வெளியில் இருந்து வருபவர்கள் யாராவது கேமரா எதாவது திரையரங்கிற்குள் எடுத்துசெல்கின்றனரா என்பதை திரையரங்க காவலாளி பார்க்க வேண்டும்.

7. தமிழ் திரைப்பட சங்கமும் திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பும் ஒன்றாக இணைந்து பைரஸியை தடுக்க ஒன்றாக இணைந்து ஒரு கமிட்டியையும் அமைக்கும்.

Advertisement