வெளியே சிரிப்பு, உள்ளே சோகம் – 5 வருடமாக மகனின் இழப்பை நினைத்து தவித்துள்ள விவேக்.

0
3498
vivek
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.இப்படி ஒரு நிலையில் நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் இன்று காலை 4.35 மணி அளவில் காலமானார்.

-விளம்பரம்-

விவேக் மனைவியின் பெயர் அருள்செல்வி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இளைய மகன் பெயர் பிரசன்னா குமார், மூத்த மகள் பெயர் அமிர்ந்தநந்தினி. இன்னொரு மகள் பெயர் தேஜஸ்வனி. இதில் அமிர்த நந்தினி 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிறந்தவர். இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆர்கிடெக்ட் படித்து வந்தார்.கடந்த 2015ஆம் ஆண்டு இளையமகன் பிரசன்னா குமார் மூளைக்காய்ச்சல் காரணமாக இறநதுவிட்ட போது விவேக்கிற்கு உறுதுணையாக இருந்து ஆறுதல் கூறியவர் அமிர்த நந்தினி.

இதையும் பாருங்க : நல்லா தான இந்தார் மனுஷன். அவருக்கு ஏன் அந்த ஊசி போடீங்க – மருத்துவமனையில் பிரச்சனை செய்த மன்சூர் அலிகான்.

- Advertisement -

தனது மகன் ருந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் தனது மகனின் இறப்பை எண்ணி வருந்தி வந்துள்ளார் விவேக். மகன் இறப்பிற்கு பின்னர் வெளியில் சிரித்த முகத்துடன் காணப்பட்டாலும் மனதளவில் துயரத்தில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து விவேக்கின் வட்டாரத்தில் கூறுகையில்,மகனின் புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் தன்னை அறியாமலே அழுது வந்துள்ளார்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எவ்வளவு ஆறுதல் சொன்ன போதும் மகன் இறப்பில் இருந்து விவேக்கால் மீள முடியாமல் இருந்து வந்துள்ளது. இந்த மன வேதனை காரணமாகவேய் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் மேட்டுக்குப்பம் மின் தகனத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement