நல்லா தான இந்தார் மனுஷன். அவருக்கு ஏன் அந்த ஊசி போடீங்க – மருத்துவமனையில் பிரச்சனை செய்த மன்சூர் அலிகான்.

0
2086
mansoor
- Advertisement -

விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை முன்பு நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு வாதம் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.

-விளம்பரம்-
Image

நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் பாருங்க : விவேக் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடல் – வெளியான உருக்கமான புகைப்படம். (இவர் முகமா இது நம்பவே முடியலயே)

- Advertisement -

அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். இதனால் அவருக்கு, Catheterization எனப்படும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டென்ட் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.அதே போல அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டதால் தான் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது என்று சர்ச்சை எழுந்தது.

https://www.youtube.com/watch?v=9IYpw3m92js&t=5s

ஆனால், இதனை மறுத்து விவேக் அனுமதிக்கப்ட்டுள்ள மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இப்படி ஒரு நிலையில் இன்று அதிகாலை 4. 35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இப்படி ஒரு நிலையில் நேற்று நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவமனை சென்ற நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கிற்கு ஏன் தடுப்பூசி போடீங்க என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement