திருடா திருடா, சத்யா படங்களில் நடித்த இந்த நடிகர் என்ன ஆனார் – இவரது மனைவி இந்த நடிகை தானா.

0
456
- Advertisement -

90களின் முன்னணி நடிகரான ஆனந்தின் மனைவி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆனந்த். இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வண்ணக்கனவுகள் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் பூந்தோட்ட காவல்காரன், அபூர்வ சகோதரர்கள், அதிசய மனிதன், அதிகாரி, தலைவர்கள், அஞ்சலி, வானத்தைப் போல உனக்கு 20 எனக்கு 18 போன்ற பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

90ல் பிரபல நடிகராக திகழ்ந்தவர் :

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் மூலம் நடிகர் ஆனந்த் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் 90 காலகட்டத்தில் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திருடா திருடா படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது.

- Advertisement -

சினிமா மற்றும் சீரியல் :

ஆனால், அந்த படத்திற்கு பிறகு இவருடைய படங்கள் எதுவும் பெரிதாக பேசவில்லை. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், இவர் சினிமாவில் நடிகர் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். அதிலும் தமிழில் இவர் சிகரம் என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல மொழி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

அன்பே வா சீரியல் :

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் அன்பே வா என்ற சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியலில் இவர் கதாநாயகன் வருணின் அப்பாவாக நடிக்கிறார். அதேபோல் இவர் தெலுங்கு, மலையாளம் என பிறமொழி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ரங்கூன் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனந்தின் மனைவி :

அதற்குப் பிறகு இவருடைய படங்கள் தமிழில் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இவருடைய படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இவருடைய மனைவி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் ஆனந்த் அவர்கள் நடிகை பூர்ணிமா என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரும் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர்.

ஆனந்தின் மகன் :

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் மீடியாவில் இருந்து விலகி விட்டார். இவர்களுக்கு பாரத் அருண் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் இவருடைய மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் ஆனந்தின் மனைவியைப் பார்த்து பலரும் இந்த நடிகை தானா! உங்கள் மனைவி என்று வியப்பில் கமெண்ட்களை பதிவிட்டு புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.

Advertisement