தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.
இதையும் பாருங்க : முகம் சுழிக்கும் வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா – விலாசி தள்ளிய நெட்டிசன்கள். சப்பை கட்டு கட்டிய சமந்தா.
இரண்டாம் திருமண சர்ச்சை :
மேலும், நடிகை அமலா பால் பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.பவிந்தர் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலானது. கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி பவிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
விவாகரத்து குறித்து பேசிய அமலா பால் :
இதனால் அமலா பாலுக்கு இரண்டாம் திருமணம் நடைபெற்று விட்டது என்று பல்வேறு இணையதளத்திலும் செய்திகள் பரவியது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் தனது அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பதிவிட்டதால் அமலா பால் பவிந்தர் சிங் மீது வழக்கும் தொடந்தார். பேட்டியில் நடிகை அமலாபால் விவாகரத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நான் விவாகரத்து செய்து பிரிந்தபோது எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை.
மறுமணம் குறித்து பேசிய அமலா பால் :
எல்லோரும் என்னை பயமுறுத்த முயற்சி செய்தனர். நான் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது எனது மனநிலை பற்றியோ, எனது மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றியோ யாரும் கவலைப்படவில்லை” என்றார். இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் ‘”உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும்?” என ஒரு ரசிகர்கள் கேள்வி கேட்க, “அதை நானே கண்டுபிடிக்கவில்லை, உண்மையாக தான். நான் என்னையே புரிந்துகொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். அதை நான் கண்டுபிடித்தபின் கண்டிப்பாக சொல்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.