‘ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பு வரும்’ – உருவக் கேலி விமர்சனங்கள் தேசிய விருது நாயகி அபர்ணா

0
574
aparna
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரத்தில் பிறந்தவர். இவர் மலையாள சினிமாவில் 2015-ஆம் ஆண்டு வெளியான “ஒரு செகண்ட் கிளாஸ் யாத்திரை” என்ற படத்தின் மூலம் தமிழ் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த “மஹேஷிண்டே பிரதிகாரம்” என்ற படம் படம் மூலம் தான் இவருக்கு நல்ல பெயரை கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் சில மலையாளப் படங்களில் பாடியும் இருக்கிறார். பின் இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார். அதன்பின் ஜிவி பிரகாஷின் சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து இருந்த சூரரைப்போற்று படம் மூலம் தான்.

- Advertisement -

அபர்ணா நடித்து இருக்கும் படங்கள்:

இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடம் பிடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் இவருக்கு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த வீட்ல விசேஷங்க படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் “Fingertip-2” என்ற தொடரில் நடித்து இருந்தார்.

அபர்ணா நடிக்கும் படங்கள்:

ஏற்கனவே இந்த தொடரின் முதலாம் பாகம் வெளியாகி இருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தில் அபர்ணா நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் அசோக்செல்வன் உடன் நடித்து இருக்கிறார். கார்த்தியுடன் பெயரிடாத படத்திலும், சில மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அபர்ணா. இந்த நிலையில் சமீபத்தில் அபர்ணா பாலமுரளி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

அபர்ணா அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, கொரோனா லாக்டோன் சமயத்தில் சோசியல் மீடியாவில் பயங்கர மோசமாக மீம்ஸ் எல்லாம் வெளியாகியிருந்தது. ஒருவரின் உருவத்தை கிண்டல் கேலி செய்து மீம்ஸ் போட்டிருந்தார்கள். அதிலும் நான் குண்டாக இருந்தது குறித்து பல்வேறு விதமாக கேவலமாக பேசி இருந்தார்கள். இதெல்லாம் பார்த்த போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதே போல் ஒரு முறை நான் மாடலிங்கில் இருக்கும் போது என்னுடைய ஆடை நீளமான துணியில்லை.

மன அழுத்தம் குறித்து அபர்ணா சொன்னது:

அப்போது அந்த உடையின் புகைப்படத்தை எடுத்து சோசியல் மீடியாவில் மாப்பிங் செய்து ரொம்ப கேவலமாக பதிவிட்டு இருந்தார்கள். இதனால் நான் ரொம்பவே மன அழுத்தத்திற்கு சென்றுவிட்டேன். அடுத்து எதுவுமே செய்யமுடியாது, நடிப்புத் துறையே வேண்டாம் என்றெல்லாம் யோசிக்கிற அளவுக்கு சென்று விட்டேன். அந்த அளவிற்கு இந்த சோசியல் மீடியா மூலம் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தனுஷ் உதாரணம் :

உடல் தோற்றத்திற்கும் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் உடல் பருமனாக இருக்கிறேன் என்று சொல்வதைக் கேட்டு வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால், இப்போது அப்படி பேசுவதை கண்டு கொள்வது இல்லை. ஆரோக்கிய பிரச்சனை மற்றும் வேறு சில காரணங்களால் உடல் எடையில் மாற்றங்கள் வரலாம். ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பு வரும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நடிகர்களுக்கும் தோற்றத்திற்கும் தொடர்பு இல்லை திறமை மட்டும் தான் முக்கியம் .தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் செல்வாக்கிற்கு முன்னாள் அவர்களின் தோற்றம் ஒன்றுமே இல்லை.

Advertisement