Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஏன் ராத்திரி வேற எங்கனா போனயா ? சீரியலில் நடித்த போது அவமானப்பட்டுள்ள பிரியா பவானி சங்கர்.

0
342
Priya
-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னனி நடிகையாக வளர்ந்து இருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக தான் தனது கெரியரை துவங்கியவர். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்தார். இவர் நடித்த முதல் சீரியலிலேயே தனெக்கென ரசிகர் படையை சேர்த்தார். தற்போது வெள்ளித்திரையில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். இவர் மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

ஏற்கனவே இன்ஸ்ட்டாவில் ரசிகர் ஒருவர் உங்களுடைய முதல் சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். அதற்கு பிரியா பவானி சங்கர் அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதில் நடிகை பிரியா கூறியது, நான் செய்தி வாசிப்பாளராக இருந்த போது ஒரு நியூஸ் புல்லடினுக்கு ரூ. 360 சம்பளம் கிடைத்தது என்று ப்ரியா தெரிவித்தார். அதே போல முதல் ஆறு மாதம் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

தற்போது இவர் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி “பொம்மை” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வரப்போகிறது. மேலும், பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதியாக யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பிரியா பவானி ஷங்கர் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் சின்னத்திரையில் இருந்த போது இவர் சந்தித்த அவமானங்கள் குறித்து பிரபல நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இரவின் நிழல் படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாணமாக நடித்தவர் நடிகை ரேகா நாயர். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரேகா நாயர். ஆனால், இதற்கு முன்பாகவே சில சர்ச்சை மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.

-விளம்பரம்-

அதிலும் சித்ரா இறப்பின் போது சித்ரா குறித்தும் அவரது கணவர் ஹேம்நாத் குறித்தும் பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து சித்ரா ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார். இரவின் நிழல் படம் வெளியான போது இவர் அந்த படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து பயில்வான் விமர்சித்ததால் அவருடன் நடு ரோட்டில் சண்டையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் ‘ப்ரியா பவானி சங்கர் புதிய தலைமுறை சேனல் இருந்து வெளியேறிய போது அப்போது அவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார் ஏன் ராத்திரி வேறு எங்கேயாவது போனியா என்று அப்படியே கேட்டார்கள் அந்த செட்டில் நான் இருந்தேன். இன்று அவர் வேறு இடத்திற்கு வந்துவிட்டார். ஆனால், என்னை யாரவது அப்படி கேட்டு இருந்தால் செருப்பை கழட்டி அடித்துவிட்டு வந்து இருப்பேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news