சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறாரகள். அந்த பிரியா வாரியார் தற்போது பிரகிடா வரை அனைவரும் சமூக வளைத்ததின் மூலம் பிரபலமாடைந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகை அதுல்யா ரவியும் ஒருவர். கோயம்பத்தூர் தமிழ் பெண்ணான இவர், 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர். இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது.
.காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார்.. அந்த படத்தில் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்து இருந்த அதுல்யாவை பார்த்து ரசிகர்கள் பலர் ஷாக்காகினர். பின்னர் இனி இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அதுல்யா அதற்கு மன்னிப்பும் கேட்டார்.தற்போது இவர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
சாந்தனு ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரித்து உள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் கொஞ்சம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக டாக்கு லெஸ் வர்க் மோர் பாடல் இன்ஸ்டா ரீல்ஸில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ரொமான்டிக் பாடல் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் அதுல்யா, டிரான்ஸ்பேரெண்ட் வெள்ளை உடையில் அரை டிராயரில் சாந்தனுவுடன் படு ரொமான்ஸ் செய்து உள்ளார்.