43 வயதில் விஜய் பட நடிகை கர்ப்பம், வைரலாகும் புகைப்படம் – வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள்

0
183
Bipasa
- Advertisement -

விஜய் பட நடிகை கர்ப்பமாக இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். தற்போது விஜய் அவர்கள் வாரிசு என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவருடன் நடித்த பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் விஜயுடன் சச்சின் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிபாஷா பாசு. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிபாஷா பாசு. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டிலிருந்து சினிமா படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இவர் 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சச்சின் படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

பிபாஷா பாசு திரைப்பயணம்:

இந்த படத்தின் மூலம் தான் பிபாஷா பாசு தமிழ் சினிமா உலகில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதற்கு பிறகு பிபாஷா பாசு வேறு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இவர் அதிகம் பாலிவுட்டில் தான் கவனம் செலுத்தியிருந்தார். இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். இதனிடையே நடிகை பிபாஷா பாசு நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து இருந்ததாக சோசியல் மீடியாவில் கூறப்பட்டது.

பிபாஷா பாசு திருமணம்:

ஆனால், அது உண்மை இல்லை என்று தெரியவந்தது. அதனை அடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அலோன் படத்தில் நடித்த போது தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவரை காதலித்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் கரண், பிபாஷா பாசு இணைந்து டேஞ்சர்ஸ் என்ற வெப்சீரிஸில் நடித்து இருந்தனர். இது ஒரு பக்கமிருக்க, பிபாஷா பாசு எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்.

-விளம்பரம்-

கர்ப்பமாக இருக்கும் பிபாஷா பாசு:

அந்த வகையில் தற்போது இவர் தான் கர்ப்பமாக இருப்பதை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். பிபாஷா பாசு கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன் கணவருடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். பின் பதிவில் அவர், ஒரு புதிய நேரம், ஒரு புதிய கட்டம், ஒரு புதிய ஒளி நமது வாழ்க்கையில் தனித்துவமான நிழலை சேர்க்கிறது. நாம் முன்பு இருந்ததை விட இன்னும் கொஞ்சம் முழுமையாக்கிறது. நாங்கள் இந்த வாழ்க்கையை தனித்தனியாக தொடங்கினோம். பின்னர் நாங்கள் ஒருவரை ஒருவரை சந்தித்தோம்.

பிபாஷா பாசு பதிவிட்ட பதிவு:

அதிலிருந்து நாங்கள் இருவரும் இணைந்தோம். இருவர் மீது மட்டும் அதிக அன்பு பார்ப்பதற்கு கொஞ்சம் அநியாயமாக தோன்றியது. ஒரு காலத்தில் இருவராக இருந்த நாங்கள் இப்போது மூன்று பேர் ஆகிவிடுவோம். நமது அன்பால் இந்த பூமிக்கு வெளிப்படும் ஒரு படைப்பு நம் குழந்தை விரைவில் நம்முடன் சேர்ந்து நமக்கு மகிழ்ச்சியை சேர்க்கும் என்று பதிவிட்டிருக்கிறார். பிபாஷா பாசுவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement