“நான் இந்த அரசாங்கத்தை நேசிக்கவில்லை” – சர்ச்சையை கிளப்பிய பிரபல ஒளிப்பதிவாளர் Pc ஸ்ரீராமின் பதிவு.

0
499
Pc
- Advertisement -

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுதும் நேற்று 75-வது ஆண்டு சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு இருந்தது. வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசியக் கொடியை ஒளிர விடுதல் போன்றவைகள் கடைபிடிக்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா முழுவதிலும் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து ரஜினி, விஜய், இளையராஜா, நடிகர் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, பாடகி சித்ரா, இயக்குனர் செல்வராகவன், இயக்குனர் மோகன்ஜி, நிர்மலா சீதாராமன் உட்பட பல பிரபலங்கள் மற்றும் நாட்டு மக்களும் தங்களுடைய சோசியல் மீடியாவில் முகப்பு புகைப்படங்களை தேசியக் கொடியாக மாற்றி இருந்தனர். மேலும், நாடு முழுவதும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

- Advertisement -

75-வது ஆண்டு சுதந்திர தின விழா:

இது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் வகையில் மோடி கூறியிருந்தார். அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி தங்கள் தேசப்பற்றை காண்பித்து இருந்தனர். நடிகர் ரஜினிகாந்த், விஜய்யின் மக்கள் இயக்கம் அலுவலம் மற்றும் விஜய் இல்லம், மம்முட்டி, மோகன்லால், அர்ஜுன் என்று பல பிரபலங்கள் மற்றும் நாட்டு மக்களும் தங்களின் வீட்டின் முன் தேசியக்கொடியை ஏற்றி வைத்திருந்தனர்.

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் டீவ்ட்:

அதேபோல் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது, என் தேசத்தை நேசிக்கிறேன். ஆனால், அரசாங்கத்தை அல்ல. ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் பிசி ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவாளர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான பயிற்சியை முடித்து திரைத் துறையில் நுழைந்தார். தேசிய விருது பெற்ற பல வெற்றிப் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். அதோடு இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்கள் தொடங்கி தற்போது உள்ள நடிகர்கள் வரை பணியாற்றி இருக்கிறார்.

பிசி ஸ்ரீராம் இயக்கிய படங்கள்:

மேலும், இவர் கமலை வைத்து இயக்கிய குருதிப்புனல் எனும் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விக்ரம் நடித்த மீரா மற்றும் வானம் வசப்படும் ஆகிய மூன்று படங்களையும் இவர் இயக்கி இருந்தார். இந்த மூன்று படங்களும் விமர்சனரீதியாக பாராட்டுகளை பெற்று இருந்தது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதற்கு பின் இவர் படங்களை இயக்கவில்லை.

Advertisement