தமிழில் காதல் அழிவிதில்லை என்ற படத்தில் அறிமுகமான சார்மி அதன் பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை சார்மிக்கு மவுசு ஏற்பட்டு அங்கே பல படங்களில் நடித்து விட்டார். சமீப காலமாக படங்களில் நடிப்பதில் முற்று போட்ட சார்மி தற்போது பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தாயரிப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராகவும் , தயாரிப்பாளாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூரி ஜெகன்நாத். மேலும் தெலுங்கில் போக்கிரி, பிசினஸ் மேன் போன்ற படங்களைஇயக்கிய இவருக்கும் நடிகை சார்மியுடன் கள்ள தொடர்பில் இருப்பதாக சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இதனை பற்றி சமீபத்தில் விளக்கம் கொடுத்த சார்மி “நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன் , தற்போது எனது வாழ்கையை சௌகர்யமாக வாழவே தற்போது நான் பூரி ஜெகநாதனுடன் சேர்ந்து ஒரு தயாரிப்பு கம்பெனி ஒன்றை தொடங்கியயுள்ளேன், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்தால் காதலிப்பதாக என்று அர்த்தம் ஆகிவிடாது, அவருக்கும் எனக்கும் எந்த விதமான காதலும் கிடையாது “என்று தெரிவித்துள்ளார்
அதே போல சமீபத்தில் திருமணம் பற்றி கேட்ட போது, இப்பொது எனது முழு கவனம் சினிமாவில் மட்டும் தந் உள்ளது. திருமணம் செய்த பிறகு கணவர், குழந்தை இவர்களுக்கு எண்ணம் கவனம் செலுத்த முடியாது’ என்று கூறி இருந்தார் சார்மி, இப்படி ஒரு நிலையில் இவரது கவர்ச்சியான புகைப்பங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.