பிளாஸ்டிக் சிகிச்சை செய்த 21 வயது சீரியல் நடிகை மரணம் – சிகிச்சைக்கு பின் என்ன நடந்துள்ளது பாருங்க.

0
187
Chethana
- Advertisement -

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து 21 வயது சீரியல் நடிகை இறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக விளங்குவது சின்னத்திரை சீரியல்கள். தொலைக்காட்சி என்ற ஒன்று உருவானதிலிருந்தே பல மொழிகளில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மொழியும் டிஆர்பி ரேடிங்காக வித்தியாசமான கதைகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் சேனல்கள் மட்டுமில்லாமல் சீரியல்களில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் கன்னட சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சேத்தனா ராஜ். இவர் பெங்களூருவின் அபிகெரே பகுதியைச் சேர்ந்தவர். இவர் கன்னடத்தில் கீதா, தொரேசானி, ஒளவினா நில்டானா போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹவயாமி என்ற கன்னட படத்திலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் அநியாயமாக இறந்துள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் பாருங்க : சிம்புவை திருமணம் செஞ்சா நல்லா தான் இருக்கும், ஆனா – சிம்பு மீமை பகிர்ந்து தமிழ் சீரியல் நடிகை போட்ட பதிவு.

- Advertisement -

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை:

பெரும்பாலான நடிகர், நடிகைகள் முகத்தை அழகாக மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இதில் சீரியல் நடிகைகள் முதல் வெள்ளி திரை நடிகைகள் வரை என பலரும் தங்களுடைய அழகுக்காக இந்த சிகிச்சையை செய்து வருகின்றனர். அந்த வகையில் கன்னட சீரியல் நடிகை சேத்தனா ராஜூம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு இருக்கின்றார். இவர் பெங்களூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு இருக்கின்றார்.

அறுவை சிகிச்சை செய்த சேத்தனா:

அப்போது சிகிச்சையின்போது சேத்தனா சுயநினைவை இழந்ததால் மருத்துவர்கள் பதட்டம் அடைந்தனர். பின் அவரை அருகில் உள்ள காடே மருத்துவமனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி அங்கு அனுமதித்து இருக்கின்றனர். இதையடுத்து சேத்தனாவை ஐசியூவில் சேர்த்து சிகிக்சை அளித்து இருந்தார்கள். மேலும், 45 நிமிடம் அவருக்கு அவசர சிகிச்சை அளித்து இருந்தார்கள். இருந்தும் சேத்தனா அநியாயமாக உயிர் இழந்து இருக்கிறார். இதையடுத்து அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

சேத்தனா மரணம்:

இந்த தகவல் அறிந்த சேத்தனாவின் பெற்றோர்கள், மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையும், அலட்சியமே தங்களது மகளின் மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சேர்த்தன ராஜின் இந்த அறுவை சிகிச்சை பற்றி பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாலை நேரத்தில் அவரின் நுரையீரலில் நீர் கோத்து நிலைமை மோசமானதால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போலீஸ் விசாரணை:

இப்படி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையினால் சேத்தனா ராஜ் அநியாயமாக மரணமடைந்திருக்கும் சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து ரசிகர்கள், நெட்டிசன்கள், கன்னட சின்னத்திரை வட்டாரம் என பலரும் சேத்தனா மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து அந்த தனியார் மருத்துவமனை பேரில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்

Advertisement