90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. 1993ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பெங்காலி, மலையாளம் படங்களில் நடித்து வந்தார். தமிழில் முதன் முதலில் அறிமுகமானது 1995 ஆம் ஆண்டு வெளியான தொட்டாசினிங்கி என்ற படம் மூலம் தான்.
அதன் பின்னர் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார் தேவயானி. தமிழில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தேவயானி, 1996 முதல் 2000ம் ஆண்டு வரை 35 படங்களில் நடித்திருந்தார்.தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று பல ஹீரோக்களுடனும் நடித்து வந்தார்.
இதையும் பாருங்க : பெட்ரோல் விலை : அன்று தெறிக்க ட்வீட், இன்று தெறிக்க ஓட்டம் – நம்ம சிவகார்த்திகேயன் தான்.
தேவயானிக்கு தற்போது 46 வயது ஆகிறது தற்போதும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், படங்களை தவிர பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் தேவயானி. இவர் நடித்த கோலங்கள் சீரியல் ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஓடியது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார் தேவயானி.
நடிகை தேவயானி கடந்த இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுஇயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் காதல் திருமணம்தான். திருமணத்துக்கு பின்னர் இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற 2 மகள்களும் பிறந்தனர். சமீபத்தில் இவர்கள் மூத்த மகளின் புகைப்படம் வெளியாகி இருந்தது அதில் நம்பமுடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார்.