கைவிட்ட நிலையில் என்னோட மகளை காப்பாற்றியது கடவுள் தான் என்று உருக்கமாக நடிகை தேவயானி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா .1993 ஆம் ஆண்டு தான் இவர் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். தற்போது வரை இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.
இவர் தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதற்கு பிறகு இவர் சில படங்களில் நடித்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாகியது அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த காதல் கோட்டை படம் தான். இந்த படத்தின் மூலம் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதனைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து புகழ்பெற்றார்.
தேவையானி திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின் தேவையானி அவர்கள் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தேவையானி நடித்த சீரியல்கள்:
மேலும், படங்களை தவிர இவர் பல தொடர்களிலும் நடித்து வருகிறார். அதிலும் இவர் நடித்த கோலங்கள் சீரியல் ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஓடியது. கோலங்கள் சீரியலுக்கு பிறகு இவர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார். பின் ஜீ தமிழில் சமீபத்தில் முடிவடைந்த புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார் தேவையானி. இந்த நிலையில் சமீபத்தில் தேவயானி தனது இரு மகள்களுடன் ஒன்று அளித்து இருந்தார்.
தேவையானி அளித்த பேட்டி:
அதில் அவர் கடவுள் நம்பிக்கை குறித்து கூறியிருந்தது, நான் தினமும் என்னுடைய வீட்டில் ஆஞ்சநேயரை வணங்கி கொண்டு வருகிறேன். எனக்கு மனதிற்கு பிடித்த கடவுள் என்றால் அது காளிகாம்பாள் தான். எங்களுடைய வீட்டில் யார் வெளியே சென்றாலும் ஆஞ்சநேயரை சுற்றி கும்பிட்டு விட்டு தான் வெளியே செல்வோம். எங்கள் வீட்டில் தினமும் பூஜை நடக்கும். நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் முதலில் சாமிக்கு வைத்து கும்பிட்டு விட்டு தான் சாப்பிடுவோம்.
கடவுள் அருள் குறித்து சொன்னது:
காளிகாம்பாள் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவே முக்கியம். நான் இரண்டாவது ஆக தயாரித்த திரைப்படம் வெளியாகும் சமயத்தில் பெரிய பணம் நெருக்கடி வந்து தவித்தேன். அந்த நேரத்தில் கடவுளிடம் நாங்கள் ரொம்பவே வேண்டினோம். அப்போது கடைசி நேரத்தில் எங்களுடைய பணம் கிடைத்தது. அதைவிட இன்னொரு முக்கியமான சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது. அது என்னுடைய இரண்டாவது மகளுக்கு ஒருமுறை டெங்கு காய்ச்சல் வந்தது. அந்த நேரத்தில் அவளுடைய ரத்தத்தில் இருக்கும் அணுக்களில் அளவு நாளுக்கு நாள் ரொம்பவே குறைந்துவிட்டது. மருத்துவர்கள் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அந்த நேரத்திலும் எங்களுக்கு அந்த கடவுள் தான் காப்பாற்றி ஒரே நாள் இரவுக்குள் குழந்தையின் உடல் நலத்தை முன்னேற்றி கொடுத்து தந்தார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.