‘இன்னும் திருந்தலயே ப்ரோ’- பிக் பாஸில் இருந்து அர்னவ் வெளியேறிய பிறகு திவ்யா ஸ்ரீதர் பகிர்ந்த வீடியோ.

0
257
- Advertisement -

முன்னாள் கணவர் பிக் பாஸில் இருந்து வெளியேறுவதும் நடிகை திவ்யா ஸ்ரீதர் அடுக்கடுக்காய் போடும் வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரம் முடிந்து மூன்றாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். மேலும், இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். கடந்த வாரம் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் பெண்கள் அணி வென்று ஜாக்லினை காப்பாற்றினார்கள். பின் வார கடைசியில் வழக்கம் போல் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வைத்து செய்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

குறிப்பாக, சம்பந்தி பஞ்சாயத்து விறுவிறுப்பாக இருந்தது. கடைசியில் அர்னவ் வெளியேறினார். அர்னவ் வெளிவந்த பிறகு, ஜால்ரா பாய்ஸ் சத்யா, விஷால், தீபக். டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க என்று பேச, உடனே விஜய் சேதுபதி குறிக்கிட்டு, எதற்கு அநாகரீகமாக பேசுகிறீர்கள். உங்களுடைய கருத்தை சொல்லுங்கள், வன்மத்தை கொட்டாதீர்கள். அது ரொம்ப தவறு என்று அறிவுரை சொல்லி இருந்தார். அதோடு அர்னவ் வெளியேறின போது அன்ஷிதா கதறி கதறி அழுந்ததற்கு பலருமே விமர்சித்து இருந்தார்கள்.

திவ்யா ஸ்ரீதர் வீடியோ:

இந்த நிலையில் நடிகர் அர்னவின் முன்னாள் மனைவியும், நடிகையுமான திவ்யா ஸ்ரீதர் அடுக்கு அடுக்காய் வீடியோக்களை வெளியிடுவது தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது திவ்யாமுதலில், நீ அடிச்சா வாங்கிட்டு இருக்குற பொண்ணு நான் இல்ல. திரும்பி விழும். என்னடா பண்ணுவ என்று ரீல்ஸ் செய்திருந்தார். தற்போது மீண்டும் வடிவேலுவின் ‘நான் அசிங்கப்பட்டேன், அவமானப்பட்டேன், வெட்கப்பட்டு, வேதனைப்பட்டேன், துக்கப்பட்டேன், துயரப்பட்டேன், கஷ்டப்பட்டேன், இத்தனை பட்டும் இன்னும் திருந்தலயே ப்ரோ’ காமெடியை ரீல்சாக செய்து பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

அர்னவ்-திவ்யா விவகாரம்:

இந்த வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள் இது எல்லாமே அர்னவ்வுக்கு டெடிகேட் பண்றீங்களா, அவன் திருந்தவே மாட்டான் என்று திவ்யாவிற்கு ஆதரவாக கமெண்ட்கள் போட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து இருந்தனர். திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். பின் திடீரென அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.

சிறைக்கு சென்ற அர்னவ் :

அதோடு அர்னவிற்கு ‘செல்லம்மா’ சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு தன்னை தாக்கி இருந்ததாகவும் போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.பின் திவ்யா மீது அர்னவ் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா அளித்த புகாரின் பெயரில் அர்னவ் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியில் வந்தார். இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் செல்லம்மா சீரியலில் நடித்த அன்ஷிதா தான், என்று கூறப்பட்டது. அன்ஷிதாவும் பிக் பாஸ் 8 போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement