நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் நடிகை இலியானா. “இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தவர் இலியானா. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலும் ஆவார். இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார்.
அதன் பின் இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். அதிலும் விஜய் – சங்கர் கூட்டணியில் வெளிவந்திருந்த நண்பன் படத்தில் இலியானா நடித்திருந்தார். இந்த படம் இந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேத்தில் தான் விஜய்க்கு ஜோடியாக இலியான நடித்திருந்தார்.
இலியானா திரைப்பயணம்:
இந்த படத்தின் மூலம் இலியானா தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் என்று சொல்லலாம். அதோடு இவரின் நடனம் தான் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப்பின் இவர் தமிழில் நடிக்கவில்லை. பின் 2012 ஆம் ஆண்டு பர்பி என்ற படம் மூலம் இவர் இந்தி மொழியில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்தார். கடைசியாக இவர் பிக் புல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இலியானா காதல் விவகாரம்:
அதன் பின் அன்ஃபர் அண்ட் லவ்லி என்ற படத்தில் இலியானா நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியா புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை இலியானா காதலித்து வந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
கர்ப்பமாக இருக்கும் இலியானா:
பின் நடிகை கத்ரினா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றுபோட்டிருந்தார். அதில் அவர், தான் கர்ப்பமாக இருப்பது குறித்து குழந்தையின் ஆடை புகைப்படம் மற்றும் தான் அணிந்திருக்கும் அம்மா என்று எழுதப்பட்டிருக்கும் செயின் புகைப்படத்தையும் பதிவிட்டுஇருந்தார் .
விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். ஆனால், சிலர் உங்களுக்கு எப்போது திருமணம் ஆனது? குழந்தையின் தந்தை யார்? என்ற கேள்விகளை எழுப்பிவந்தனர். இந்த நிலையில் காதலருடன் இருக்கும் பிளாக் அண்ட் வொய்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்தும், காதலர் குறித்தும் நீண்டதொரு பதிவை எழுதியுள்ளார்.
இலியானா பதிவு :
அதில் ‘ஒரு நாள் நான் என்னிடம் நானே இரக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை மறந்தேன். இந்த மனிதர் எனக்கு துணை நின்றார். நான் உடைவதாக அவர் நினைக்கும்போதெல்லாம் என்னை தாங்கி நின்றார். என் கண்ணீரை துடைத்தார்.முட்டாள் தனமான நகைச்சுவைகளை சொல்லி என்னை சிரிக்க வைத்தார். எனக்கு தேவையான பொழுது என்னைக் கட்டிபிடித்து ஆறுதல் அளித்தார். இனிமேல் எல்லாமே அவ்வளவு கடினமாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.