இது என்ன Spider Womenஆ – அந்தரத்தில் கயிற்றில் தொங்கி வித்தை காட்டிய நடிகை ஸ்ருஷ்டி.

0
271
srusti
- Advertisement -

கயிற்றில் தொங்கிக் கொண்டே ஸ்ருஷ்டி டாங்கே உடற்பயிற்சி செய்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர். அந்த காலத்து குஷ்பூ துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை பல நடிகர்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘யாதுமாகி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டியும் ஒருவர். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியான மேகா திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது.

- Advertisement -

சிருஷ்டி டாங்கே நடித்த படம்:

பின் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் செகண்ட் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்கு பின் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். ஆனால், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இவரால் வலம் வர முடியவில்லை. இருந்தாலும், தமிழில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் இவர் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

சிருஷ்டி டாங்கே நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சேரன் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் எம் எஸ் ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த சக்ரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஷாலுக்கு வில்லியாக ஸ்ருஷ்டி டாங்கே மிரட்டி தன்னுடைய நடிப்புத் திறமையை காட்டி இருந்தார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சர்வைவர் நிகழ்ச்சி:

அதுமட்டுமில்லாமல் இவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக ஸ்ருஷ்டி வெளியேறி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

சிருஷ்டி டாங்கே பதிவிட்ட வீடியோ:

இந்த நிலையில் சிருஷ்டி டாங்கே பதிவிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, ஸ்ருஷ்டி ஒரு கயிற்றில் தொங்கிக் கொண்டே உடற்பயிற்சி செய்து இருக்கிறார். இந்த வீடியோவை தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போய் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள். மேலும், ஸ்ருஷ்டி நடிப்பில் மட்டுமில்லாமல் பல திறமைகளை வளர்த்து சாதனை படைத்து வரும் செய்தியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement