தி கேரளா ஸ்டாரி படத்தின் இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் செய்ய இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
தி கேரளா ஸ்டோரி படம்:
அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? விடுவிக்கப்பட்டார்களா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படம் குறித்த சர்ச்சை:
மேலும், இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான போது திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சர்ச்சைக்கு மத்தியிலும் வசூல் ;
அதோடு இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அதோடு பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இந்த படத்துக்கு வரி விலக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பட குழுவுக்கு மிரட்டல் வந்திருந்தது. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இயக்குனரின் அடுத்த படம் :
30 கோடி பொருட் செலவில் உருவான இந்தப் படம் இந்திய அளவில் இதுவரை ரூ.200 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் அடுத்ததாக இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் மாவோயிஸ்டகள் பற்றி படம் இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தையும் தி கேரளா ஸ்டோரி விபுல் ஷா தயாரிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.