இனியாவின் அக்கா யார் தெரியுமா ? அட, இருவரும் ஜெராக்ஸ் மாதிரி இருக்காங்க பாருங்களேன்.

0
1695
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை இனியா. இவர் 2005ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த சைரா என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். பின் இவர் 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து இவர் மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், கண் பேசும் வார்த்தைகள், மாசாணி, நான் சிகப்பு மனிதன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

1988 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இனியா சிறுவயதிலேயே பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் நான்காம் வகுப்பு படிக்கும்போதே தொலைக்காட்சி படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவேன்றம் பட்டத்தை வென்ற இவர் அதன் பின்னர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பிரபலமாகி பின்னர் 2004 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானார்.

- Advertisement -

தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த இனியா 2010ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாடகர் சாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார் இனியா. இறுதியாக இவர் பொட்டு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் காபி மற்றும் கலர்ஸ் என்ற 2 படத்தில் நடிக்கிறார். இனியாவை பற்றி இத்தனை விஷயங்கள் இருந்தாலும் இவருக்கு ஒரு அக்கா இருப்பதும் அவரும் ஒரு நடிகர்தான் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

ஆம் இனியாவுக்கு ஸ்வாதி தாரா என்ற ஒரு சகோதரியும் இருக்கிறார் இவரும் ஒரு நடிகை தான். 1986 ஆம் ஆண்டு பிறந்த இவரும் இனியாவை போல ஒரு நடிகை தான். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்து அதன் பின்னர் படங்களில் நடித்திருக்கிறார் சமீபத்தில் நடிகை இனியா தனது சகோதரியுடன் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் அந்த புகைப்படத்தில் இருவருமே ஜெராக்ஸ் போல காட்சி அளிக்கிறார்கள்

-விளம்பரம்-
Advertisement