எங்கே போனார் கனகா? பாழடைந்த வீட்டில் நடந்தது என்ன? – உதவியாளர் சொன்ன விஷயம்.

0
514
Kanaga
- Advertisement -

நடிகை கனகா வீட்டில் தீப்பிடித்த சம்பவத்திற்கு காரணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கனகா அவர்கள் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை. இந்நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்னர் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது.

- Advertisement -

கனகா பேசிய வீடியோ:

அந்த வீடியோவில் நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது. ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதற்கு பல விமர்சனங்கள் வந்தது. சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்து இருக்கிறார் கனகா. இதனிடையே புற்று நோயால் பாதிக்கப்பட்டு கனகா இறந்து விட்டதாக பல வதந்திகள் வந்தபடியாக இருந்தன.

கனகா வாழ்க்கை:

ஆனால், அதனை மறுத்து தன்னுடைய தனிமை வாழ்கையினை கடத்தி இருக்கிறார் நடிகை கனகா. இந்த நிலையில் சமீபத்தில் கனகா வீட்டில் இருந்து கரும்புகை வந் ததாக அங்குள்ள மக்கள் கூறவே அங்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்களை உள்ளே நுழைவதற்கு திட்டியதாகவும், நீண்ட நேரத்திற்கு பிறகே அனுமதித்தாகவும் கூறப்படுகிறது. உள்ளே தீயணைப்பு வீரர்கள் நுழைந்த போது வீடெங்கும் குப்பைகள், மூட்டை கட்டிய துணி என வீடே குப்பை கூலமாக இருந்திருக்கிறது.

-விளம்பரம்-

கனகா வீட்டில் தீ விபத்து:

இதனை சிரமப்பட்டு கடந்துதான் தீயை அணைத்து இருந்தார் தீயணைப்பு வீரர்கள். இந்த விபத்திற்கு காரணம், நடிகை கனகா வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது விளக்கு கீழே விழுந்து தீ பிடித்தது. பின்னர் தீ அருகில் இருந்த துணிகளில் பரவியது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், கனகா வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருக்கிறது.இந்நிலையில் கனகாவின் பாழடைந்த வீட்டில் நடந்த சம்பவம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இது குறித்து கனகாவின் உதவியாளரிடம் கேட்டபோது, கனகா தன்னுடைய நெருங்கிய உறவினர்களின் மோசமான நடத்தியால் தான் யாருடனும் நெருங்கி பழகவில்லை. அவர் எந்தவித உதவி கேட்டாலும் நான் செய்து கொடுக்கிறேன். ஒருமுறை வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கலாம் என்று சொன்னேன் அவர் பார்க்கலாம் என்று பதில் அளித்தார். அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் அவர் வாழ்க்கையை வாழ விடுங்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement