பிரசவத்திற்கு பின் உடல் எடையை ஏன் மறைக்கிறீர்கள்? சமீரா வெளியிட்ட புகைப்படம் குவியும் லைக்ஸ்.

0
4098
- Advertisement -

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் நடித்த முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சமீரா. ஆனால், இவர் பாலிவுட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். 1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்தவர் சமீரா ரெட்டி. தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இந்தியில் பல படங்களில் நடித்து வந்தார் சமீரா ரெட்டி. இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன சிடிஸின் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வேட்டை, அசல், நடுநிசி நாய்கள் என சில படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களில் பிசியாக நடித்து இருந்தார் சமீரா. இவர் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று பார்த்தால் குடும்ப தலைவியாக மாறி விட்டார். பின் தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் ஹிந்தி மொழியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அதிலேயும் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக கன்னடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வரதநாயகா’ என்ற படத்தில் நடித்து விட்டு சினிமாவிகற்கு முழுக்கு போட்டு விட்டார். பின்னர் நடிகை சமீரா அவர்கள் 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியின் வயிற்றில் கைவைத்து சஞ்சீவ் வெளியிட்ட குயூட் புகைப்படம்.

திருமணத்திற்கு பின்னர் நடிகை சமீரா குடும்பத்திலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், நடிகை சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். தற்போது இவருக்கு இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. சமீபத்தில் கர்பமாக இருக்கும் போது நடிகை சமீரா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை சமீரா அவர்கள் தற்போது குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இதனால் இவருடைய உடல் எடை இப்போது 89 கிலோ இருக்கிறது. இது குறித்து நடிகை சமீரா ரெட்டி அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, என் உடல் வளைவுகளை தழுவிக் கொண்டு இருக்கிறேன். நான் உடல் எடை அதிகரித்தாலும் என்னை நான் செஸ்சியாக தான் உணருகிறேன். எனது உடல் எடையை பழையபடி பிட்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறேன். இப்போ இருப்பதை நினைத்து நான் வெறுக்கவில்லை. காரணம் என் மகன், மகளை பெற்றதால் தான் குண்டாகி உள்ளேன். அதை நினைத்து ஏன் தேவையில்லாமல் கவலைப் படவேண்டும். என் குழந்தைகளுக்காக குண்டாக ஆனதை நினைத்து நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறினார்.

Advertisement