தப்பான ஆட்களுக்காக ஒருபோதும் வேலை செய்யாதீர்கள் – பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கண்மணியின் இன்ஸ்டா ஸ்டோரி, யார சொல்றாங்க

0
581
- Advertisement -

கண்மணி பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பின் சீரியலில் அகிலன் விலகி இருந்தார்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்மணி:

இவரை தொடர்ந்து சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி மனோகரன். இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து வந்தார். பின் பாரதியின் தம்பி அகிலை அஞ்சலி திருமணம் செய்து கொள்கிறார். இருந்தாலும் இவர் தன் அக்காவை பழிவாங்குவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி இருந்தார். பின் அஞ்சலி கர்ப்பமாக இருக்கும் போது மனம் திருந்தி கண்ணம்மாவிற்கு ஆதரவாக நின்று வருகிறார்.

சீரியலில் விலகிய கண்மணி:

இப்படி பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கதாபாத்திரம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சீரியலில் இருந்து கண்மணி விலகி விட்டார். இதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். அதற்கு கண்மணியும் விளக்கம் கொடுத்து இருந்தார். தற்போது கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார். பின் இவர் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் புது தொடரில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

-விளம்பரம்-

கண்மணி நடிக்கும் சீரியல்:

இந்த சீரியலில் இவர் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தாயின் மறைவால் தன் படிப்பை நிறுத்தியதால் கல்விக்காக ஏங்கும் அமுதா என்ற பெண் கல்விக்காக தனது படிப்பை தொடரவும் தனது கனவுகளை அடையவும் ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். அப்படியான அமுதா என்கிற வேடத்தில் தான் கண்மணி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் கண்மணி வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். விரைவில் அது சார்ந்த அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இன்ஸ்டா ஸ்டோரியில் கண்மணி பதிவிட்ட பதிவு:

இந்நிலையில் கண்மணி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் கருத்து ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, தப்பான ஆட்களுக்கு ஆக ஒரு போதும் வேலை செய்யாதீர்கள் என்ற ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டு பின்னணியில் பாரதி கண்ணம்மா நீ என தொடங்கும் பாடல் ஒன்றை தன்னுடைய ஸ்டோரியில் கண்மணி இணைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சீரியலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா? அதை குறிப்பிட்டு தான் பேசுகிறீர்களா? வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று கேட்டு வருகிறார்கள். இதற்கு கண்மணி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement