-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

அவங்ககிட்டயே போய்டலாம்னு முடிவெடுத்தேன், பக்கத்து வீட்டுகாரங்க தான் காப்பாத்துனாங்க – நடிகை கவிதா கண்ணீர் பேட்டி.

0
531
kavitha

அடுத்தடுத்து மகன், கணவன் இறந்தது குறித்து முதன் முறையாக மனம் திறந்து கண்ணீர் மல்க நடிகை கவிதா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் கவிதா. இவர் தன்னுடைய 11 வது வயதில் ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த என்றென்றும் புன்னகை என்ற தொடரில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு கவிதா பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

கவிதா பேட்டி:

அதில் அவர் தன்னுடைய கணவர், மகன் இறப்பு குறித்து சொன்னது, அவருக்கு இப்படி ஆகும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இரண்டு பேருக்குமே உடல்நலம் நன்றாகத் தான் இருந்தது. கொரோனா தொற்று அதிகமாக பரவிய சமயத்தில் தான் எங்களுடைய வீட்டில் பாட்டி, என் கணவர், மகன் உட்பட ஏழு பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பின் அனைவருமே முறையான சரியான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பு:

-விளம்பரம்-

அப்படித்தான் என்னுடைய கணவரும் மருந்து மாத்திரைகளை எடுத்திருந்தார். ஆனால், அவருக்கு சிகிச்சை கை கொடுக்கவில்லை. என்னுடைய குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரண்டே நாட்களில் என்னுடைய மகன் இறந்தான். அடுத்த சில நாட்களில் என்னுடைய கணவர் இறந்துவிட்டார். இந்த உலகில் எது இல்லை என்றாலும் நான் இருந்து விடுவேன். ஆனால், அவர் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. எனக்கு கடவுள் மீது நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது.

-விளம்பரம்-

மகன்-கணவன் இறப்பு:

குடும்பம் குடும்பம் என்று குடும்பத்திற்காகவே நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கொரோனா தொற்று ஏற்பட்டு என் வாழ்க்கையே போய் விட்டது. என்னுடைய வாழ்க்கையில் நான் முதன்முறையாக கேமரா இல்லாமல் நடித்தது அப்போதுதான். காரணம், என்னுடைய மகன் இறந்துவிட்டான் என்று என்னுடைய கணவருக்கு தெரியாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அவரை நான் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னுடைய மகனைப் பற்றி பேசும்போது அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான், நன்றாக இருக்கிறான் என்று பல பொய்களை சொல்லி நடித்துக் கொண்டிருந்தேன்.

தற்கொலை முயற்சி செய்ய காரணம்:

பின் அவர் இருக்கும் அறையை விட்டு வெளியே வந்தவுடன் கதறி கதறி அழுதேன். அந்த சமயத்தில்தான் நான் முதன் முறையாக என்னுடைய வாழ்க்கையிலேயே நடித்தேன். இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய இரண்டு பெண் குழந்தைகள் தான். இதற்கிடையில் என் மகன், கணவன் இறந்த பிறகு நான் மூன்று முறை தற்கொலை செய்ய முயன்றேன். என்னுடைய அம்மா தான் என்னை அடித்து தற்கொலைக்கான கவுன்சிலிங் எல்லாம் கொடுத்து என் மகள்களுக்காக என்னை வாழ மாற்றினார். நான் இப்போது என்னுடைய மகள்களுக்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news