வீட்டிற்குள் வந்த பாம்பை அசால்ட்டாக பிடித்து வெளியில் விட்ட தமிழ் நடிகை – அவங்க அப்பா யாரு.

0
1308
keerthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல்வேறு வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமான வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான அருண்பாண்டியன் அம்மக்களும் சமீபத்தில் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் அருண் பாண்டியன். மேலும், “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியன் சினிமாவில் வாய்ப்பு குறையவே பட தயாரிப்புகளில் இறங்கிவிட்டார். வில்லு, அங்காடி தெரு, முரட்டு காளை போன்ற பல்வேறு படங்களை தயாரித்த அருண் பாண்டியன், சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ படத்தை தயாரித்து இருந்தார். அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். அதில் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் நடித்த தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி பாண்டியன். கொரோனா சமயத்தில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார் கீர்த்தி பாண்டியன். கடந்த மாதங்களுக்கு முன் டிராக்டர் மூலம் தானே விவசாய நிலத்தை உழும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த வீடியோவில், இந்த நாட்களில் அனைவரும் மீண்டும் விவசாயம் செய்வோம்.

விவசாயம் நம்முடைய சொத்து. பொது இடம் கிடையாது. நாம் அதிக பொறுப்புகளுடன் இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார் கீர்த்தி பாண்டியன்.தற்போது தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு ஆளாக துணிச்சலாக பிடித்த கீர்த்தி பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார். இதையும் வீடியோவாக பதிவு செய்துள்ள கீர்த்தி பாண்டியன், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement