சோசியல் மீடியாவில் உருவத்தைக் கிண்டல் செய்த பெண் ஒருவருக்கு நடிகை குஷ்பு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் குஷ்புவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தவர்கள். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.
குஷ்பூ திரைப்பயணம்:
இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பூ நடித்து இருந்தார்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
குஷ்பூவின் மீரா சீரியல்:
தற்போது குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மீரா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இந்த தொடர் ஒளிபரப்பானதில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தார் குஷ்பு. அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார்.
குஷ்பூ அரசியல்:
தற்போது இவர் பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும், குஷ்பு கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவருடைய ட்விட்டர் பக்கம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கு. சமீப காலமாகவே குஷ்பு தனது உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். குஷ்பூ ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதற்கு சிலர் நெகட்டிவான விமர்சனங்களும் சொல்லி இருந்தார்கள். அந்த வகையில் குஷ்பூவின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு ரேகா என்ற பெண் ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.
குஷ்பூ கொடுத்த பதிலடி:
அதில் அவர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஏன் ஸ்லிம்மாக வேண்டுமா? என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறி இருந்தார். இதை பார்த்த குஷ்பு, நீங்கதான் அதற்கு பணம் கொடுத்தீர்களா மைடியர்? மற்றவர்களை காயப்படுத்தி சந்தோஷப்படும் உங்களைப் பார்த்தால் அவமானமாக உள்ளது என்று கூறியிருந்தார். குஷ்புவின் இந்த கமெண்டுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து பாராட்டி வருகின்றனர். மேலும், குஷ்பூ உடல் எடையை குறைத்து வருவதற்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் 90களில் பார்த்த குஷ்பு திரும்பி வந்துவிட்டார் என்று உற்சாகப்படுத்தி வருகின்றனர்.