ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலை, சத்யராஜ் மூலம் கிடைத்த சினிமா வாய்ப்பு – மண்ட பாத்திரம் காமெடி நடிகரின் அறிந்திராத பக்கம்.

0
3399
sakthivel
- Advertisement -

மண்டபத்திரம் என்ற வடிவேலு காமெடியை யாரும் பார்ந்திருக்காமல் இருக்க முடியாது ஏனென்றால் அதில் வடிவேலு செய்யும் காமெடி நமக்கு பிடித்தமான ஒன்று இப்போதும் மீன் கிரியேட்டர்களுக்கு அதிகம் பயன்படும் ஒரு மீம்ஸ் டேம்ப்லெட் அது என்று சொல்லலாம் அது மட்டும் இல்லாமல் என் மச்சினிச்சி கூட நான் பேசுவேன் கொஞ்சுவேன் அதை எவன்டா கேட்பது போன்ற நம்மை சிரிக்க வைத்த அதிக காமெடி காட்சிகளில் நடித்தவர் தான் சக்திவேல் சமீபத்தில் யூடியுப் நிறுவனம் ஒன்றிருக்கு இன்டர்வியூ கொடுத்த சக்திவேல் . அவர் கூறிய சுவாரஸ்யமான விஷயங்கள் நம்மிடம் மனம் திறந்தே பேசினார்.

-விளம்பரம்-

நான் பள்ளியில் 9th 10th படிக்கும் போது பள்ளியில் வாலிபால் பிளேயர்ராக மாறி அப்படியே டிஸ்ட்ரிக்ட் டிவிஷனல் என்ன போயிட்டு வந்து பின்பு 11 th படிக்கும் போது ஸ்டேட் செலக்சன் நடந்த போது ஸ்டேட் செலக்சன் சென்றிருந்தேன்.அதுகளிலும் செலக்ட் ஆகி 11th 12th வகுப்பில் படிக்கும் போது ஸ்டேட் மேட்ச் ஆடிக் கொண்டிருந்தேன் அதன் பின்பு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் காலேஜும் சேர்ந்து காலேஜில் படிப்பு முடிந்தவுடன்.இன்கம் டேக்ஸ் ஆப் இந்தியாவும் அவர்கள் வந்து என்னிடம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அவர்களே வந்து பார்ம் கொடுத்து பார்ம்மை நிரப்ப பண்ண சொல்லி ஜாயின் பண்ண சொன்னாங்க அப்படியாக தான் நான் அரசு பணியில் சேர்ந்தேன்.

- Advertisement -

சக்திவேல் சினிமா வாழ்க்கை :-

அப்பொழுது ஒரு நாள் சத்யராஜ் சார் எனது ஆபீஸ் வழியாக வந்தார் அப்போது நான் சென்று அவரிடம் பேசினேன் நீங்கள் அரசு அதிகாரி தான் என்று என்னிடம் கேட்டார் ஆமா சார் என்று பேசினோம் பிறகு சினிமாவில் நடிப்பதற்காக ஒரு வாய்ப்பு ஒன்று கேட்டு பிறகு அப்படியே கிராமத்து மின்னலே என்ற படத்தில் ரேவதி உடன் ஒரு டயலாக் பேசி நடித்தேன். அப்படி ஆரம்பித்தது தான் என்னுடைய சினிமா வாழ்க்கை பின்பு சண்டைக் காட்சிகளில் நடித்து பின்பு எனக்கு டயலாக் எதுவும் கொடுக்காமல் சண்டைக்காட்சிகளில் நடிப்பேன் என்று அவர்களே நினைத்து என்னை சண்டைக் காட்சிகள் மட்டும் கூப்பிடுவார்கள். சத்யராஜுக்கும் எனக்கும் ஒரு சோலவாக ஒரு சண்டைக் காட்சி வரும்போது அடி அடியேன அடித்து கால் கையெல்லாம் அடிபட்டு ரத்தம் வந்து பின்பு அசிஸ்டன்ட் டைரக்டர்கள் அழைத்துச் சென்று உதவினார்கள் காயங்கள் மருந்து போட்டு இப்படியாக எல்லாம் நடித்து எனக்கு சண்டைக் காட்சிகளில் சண்டை போடத் தெரியாமல் பழகி கொண்டேன்.

சாவின் விளிம்பு வரை சென்றேன் :-

மணிவாசகம் டைரக்ஷனில் சரத்குமார் கூட ஒரு படம் மட்டும் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது சரத்குமார் என்னை கழுத்தில் கயிறு கட்டி தொங்க விடுவது போன்ற ஒரு காட்சி அப்பொழுது கழுத்தில் ஒரு டம்மி நாட் போட்டு இருப்பார்கள். சரத்குமார் வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள் நான் கேட்டுக் கொண்டிருப்பேன் அப்போது அப்படியே கண்கள் சொக்க. அந்த டம்மி நாட் என் கழுத்தை இருக்க ஆரம்பித்தது அப்போது நான் அன்கான்சியஸ் ஆக இருந்ததால் அவர்கள் பேசுவது எனக்கு கேட்கவில்லை.அதன் பிறகு சொன்னார்கள் மணிவாசகம் செத்தது போலவே நடிக்கிறான்டா திறமையாக பன்றாடா என்று வியப்புடன் சொன்னாராம். சரத்குமார் டயலாக் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னை பார்த்து விட்டு கண் வெள்ளையாக மாறி உள்ளது இறக்குங்கள் இறக்குங்கள் என டயலாக் பேசுவதை நிறுத்தி விட்டு கேமரா ஓடுவதையும் கண்டுக்காமல் இறக்கி விட்டார் பின்பு கீழே இறங்கியவுடன் நான் அந்த அன்கான்சியஸ் மனநிலையில் கை காலை ஆட்டித் தரையோடு அடித்து கொண்டுள்ளேன் சாவின் சாவின் மிக அருகில் சென்று உயிர் தப்பி வந்தேன். அப்போது சரத்குமார் கண்டுக்காமல் அவருடைய டயலாக்கை முடித்து இருந்தால் நான் என்று உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்னை காப்பாற்றியது சரத்குமார் தான் என்றார்.

-விளம்பரம்-

ரஜினியுடன் நடித்ததால் தான் கொஞ்சம் சினிமாவில் தெரியவந்தேன் :-

எனது முகம் பிரபலமாக வெளியே வந்தது எப்போது என்றால். நான் நடித்த தளபதி திரைபடத்தில் ரஜினிகாந்தை கட்டி தொங்க விட்டு அடிப்பது போல் ஒரு காட்சி வரும் பின்பு அதைப் படத்தில் ரஜினிகாந் என் கையை வெட்டுவது போல் வரும் காட்சியில் நான் கத்தியபடி தலை முழுவதும் ரத்தம் வழிந்தோடும். அந்த புகைப்படம் எல்லா பத்திரிக்கையிலும் வந்த போது தான் யார் என்று மக்கள் தேடும்போது தான் நான் தான் என தெரிந்து கொண்டார்கள். பின்பு தியேட்டர் சென்று படம் எல்லாம் பார்க்க வில்லை மக்கள் ஆவேசமாக இருந்தனர் யார்ரா நீ ரஜினியே கட்டி வைத்து அடித்து விட்டாய் என்றார்கள் நான் படத்திற்கே சென்று பார்க்கவில்லை அதன் பிறகு ரஜினிகாந்துடன் நடித்ததால் தான் என் முகம் தெரிந்து கொஞ்சம் பிரபலமானது என கூறினார்.

சன்டையில் இருந்து காமெடியா மாறினேன் :-

பின்பு சில காலம் படங்கள் நடிக்காமல் இருந்தேன். அடுத்து நான் ஒரு ஜிம்மில் சேர்ந்தேன். அப்போது சுந்தர்.சி யும் அதே ஜிம்தான் வருவாரு போல அப்பொழுது நாங்கள் இருவரும் பார்த்து பேசிக் கொண்டிருந்தோம் என்னை விசாரித்தார் நானும் நலம் விசாரித்து பின்பு இரண்டு என்ற ஒரு படம் இருக்கிறது அதில் வடிவேலுக்கு காம்போவாக காமெடி சீன் இருக்கும் நடிக்கிறிங்களா என்று கேட்டார். நான் உடனே சார் சும்மாதான் சார் இருக்கேன் அப்படின்னு சொல்லி சொன்னேன்.பின்பு வடிவேலு உடன் நடித்த அந்த காமெடி காட்சிகள் மக்களிடம் பிரபலமாக பேசப்பட்டது. அனைவருக்கும் பிடித்தமான நடிகராகவும் அப்படியே இருந்து சினிமா வாழ்க்கையை நடத்தி சென்றது. அடுத்து அப்படியே காமெடி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தேன் என்று கூறி முடித்தார்.

Advertisement