நடிகை குஷ்பூவிற்கு கண்ணில் ஏற்பட்ட காயம் – பெரிய கட்டுடன் குஷ்பூ பகிர்ந்த ஷாக்கிங் புகைப்படம்.

0
946
kushboo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர் என்பதும் அனைவரும் அறிந்த விஷயம். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை குஷ்பு கண்ணில் பெரிய கட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும், சிறிது காலம் நான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன். என்னுடைய கண்களில் இன்று காலை காயம் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று இருக்கிறேன். விரைவில் உங்களை சந்திப்பேன். அனைவரும் மாஸ்க் அணியுங்கள் வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

குஷ்பூவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், குஷ்பூ விரைவில் குணமடைய ஆறுதல் கூறி வருகின்றனர். குஷ்புவிற்கு எதாவது கண்ணில் காயாமா அல்லது அறுவை சிகிச்சை செய்துள்ளாரா என்பது தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நடிக்க உள்ள குஷ்பூ, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement