அம்மா அப்பா இருவருக்கும் கொரோனா – தந்தைக்கு தீவிர சிகிச்சை. விஜய் வசந்த் தகவல்.

0
1453
vijayvasanth

இந்தியாவில் கடந்த 4, 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினர்.அதே போல தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி போன்ற பலர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகினர்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் கருணாஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் எஸ் பி பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் விஜய் வசந்தின் தந்தையும் வசந்த் அண்ட் கோ உரிமைமையாளருமான வசந்தகுமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வசந்தகுமார் எம்பியின் ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கியதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்து பேசியுள்ள விஜய் வசந்த், அப்பாவிற்கு கொரோனா தொற்று வந்ததை அடுத்து அம்மாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. படிப்படியாக குணமாகி வந்த நிலையில் நேற்று திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மயக்க நிலையில் இருக்கிறார். வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவரது நிலை \யில் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement