பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் களமிறங்க உள்ள லைலா. எந்த சேனல் ? என்ன சீரியல் தெரியுமா ?

0
1121
laila

சினிமாவை பொருத்தவரை பட வாய்ப்புகள் இல்லை என்றால் உடனே சின்னத்திரை பக்கம் திரும்பி விடுவது வாடிக்கையான ஒரு விஷயம்தான். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் ஒரு சில இளம் நடிகைகள் கூட பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சின்னத்திரையில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான லைலாவும் தற்போது சின்னத்திரையில் கால் பதித்திருக்கிறார்.தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே என்று இந்தி, தெலுங்கு, உருது, மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார் லைலா. இவர் சினிமா துறையில் முதன் முறையில் அறிமுகமானது இந்தியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான துஷ்மன் துனியா கா என்ற படத்தின் மூலம் தான். தமிழில் வெளியான கள்ளழகர் திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார் நடிகை லைலா.

- Advertisement -

“தில், தீனா, மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தமிழ் திரையுலகில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்து நின்ற லைலா, கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை லைலா, தான் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

இறுதியாக நடிகை லைலாவை அஜித்துடன் திருப்பதி படத்தில் பார்த்தது தான் அதன் பின்னர் நடிகை லைலா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை லைலா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கோகுலத்தில் சீதை ‘ தொடரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை லைலா ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-
Advertisement