மனைவியும் கைவிட்டாங்க, பிக் பாஸ் டைட்டிலும் கிடைக்கல.இப்போ சின்னத்திரையிலும் இப்படி ஒரு சிக்கலில் சிக்கியுள்ள தினேஷ்.

0
492
- Advertisement -

பிக் பாஸ் தினேஷ் மீது சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் குற்றம் சாட்டிற்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தினேஷ். சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொண்டிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தினேஷ் டாப் 5ல் வந்தார். பின் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை டைட்டில் இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ் பிடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் தினேஷ் மற்றும் சில சீரியல் நடிகர்கள் மீது சின்னத்திரை நடிகர் சங்கம் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் சிவன், பொது செயலராக போஸ் வெங்கட் இருக்கிறார்கள். இவர்கள் தலைமை ஏற்றபின் நிர்வாகத்தின் உடைய முதல் பொதுக்குழு இன்னும் சில தினங்களில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், கடந்த முறை சங்க நிர்வாகத்தில் இருந்த சிலர் நிதி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

- Advertisement -

சின்னத்திரை நடிகர் சங்கம்:

இந்நிலையில் இது தொடர்பாக சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் சிலர் கூறியிருப்பது, சென்னையில் நடிகர் சங்கத்தில் தற்போதைய நிர்வாகம் பொறுப்புக்கு வரும் முன் ரவிவர்மா தலைமையிலான நிர்வாகம் பதவியில் இருந்தது. அப்போது நடிகர், நடிகைகளை அழைத்துக் கொண்டு மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தி இருந்தார்கள். அப்போது ஒரு 11 லட்சம் வரை பணம் முறையாக கையாளப்படாமல் மோசடி நடந்ததாக அப்போதே பலர் கூறியிருந்தார்கள். சிவன், போஸ் வெங்கட் தலைமையிலான அணி பொறுப்புக்கு வந்தால் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள்.

நடிகர் சங்கத்தில் நடந்த மோசடி:

அதேபோல் சிவன், போஸ் வெங்கட் வெற்றி பெற்று பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த சூழலில் தான் சங்கத்தின் முதல் பொதுக்குழு ஜனவரி 26 ஆம் தேதி விருகம்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் நேரத்தில் சொன்ன மாதிரியே இவர்கள் பதவிக்கு வந்ததால் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். அதேபோல் ரவி வர்மா தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நிற்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். இதனால் இவர் இரண்டு, மூன்று முறை தோல்வியும் சந்தித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தினேஷ் மீது புகார்:

அதற்கு காரணம் இந்த மோசடி புகார் என்றும் கூறப்படுகிறது. அடுத்த தேர்தலில் இவர் கண்டிப்பாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் சில ஆண்டுகள் தான் சங்க தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புது தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறப்படுகிறது. தேர்தலில் நிற்பதும், உறுப்பினர் குறித்து சில முடிவுகள் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ரவிவர்மாவுடன் சில நடிகர்களும் இந்த மோசடியில் இருக்கிறார்களாம். நடிகர் தினேஷை பொருத்தவரை தற்போது நிர்வாகத்திலும் பதவியில் இருக்கிறார். கடந்த தேர்தலிலும் ரவிவர்மா சார்பாக வென்ற சிலரில் தினேஷும் ஒருவர். கடந்த முறை ரவிவர்மாவுக்கு சங்க நடவடிக்கை தொடர்பாக சட்ட ஆலோசனைகள் வழங்கியது, நிர்வாக பதவியில் இல்லாமலே சங்க ஆவணங்கள் சிலவற்றை அவர் கையாண்டதாகவும் தினேஷ் மீது புகார் வைத்திருக்கிறார்கள்.

ரவிவர்மா பேட்டி:

தினேஷ் தவிர ராஜ்காந்த் உள்ளிட்ட சில பேரும் ரவிவர்மா குழுவில் சேர்ந்தவர்கள் தான். பொதுக்குழு கூட்டத்தில் அவர்கள் எந்தவித பிரச்சனையும் தடங்களையும் ஏற்படுத்தாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பும் போட கேட்கப்பட்டிருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இதை அடுத்து ரவி வர்மா, இந்த புது நிர்வாகம் பொறுப்புக்கு வந்ததிலிருந்து டிவி ஆர்டிஸ்டிகளுக்கு என்று உருப்படியா எதையும் செய்யவில்லை. அதைப்பற்றி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் என்று அதை திசை திருப்ப இந்த மாதிரி வேண்டாத வேலைகளை செய்யலாம் என்று நினைக்கிறார்களோ, என்னவோ என்று கூறியிருக்கிறார்.

Advertisement