பிதாமகன் சிம்ரன் போல ரசிகரால் நமீதாவின் வாழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம். அப்போ பாலா இத வச்சி தான் அந்த சீன வச்சாரா ?

0
377
namitha
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்த வரை நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. குஷ்பூவிற்கு கோவில் கட்டியது முதல் நடிகைகளுக்காக கையை அறுத்துக்கொண்டது வரை பல செய்திகளை நாம் கேட்டு இருக்கிறோம். ஆனால், நடிகையை ரசிகர் கடத்தியதை சினிமாவில் தான் பார்த்து இருக்கிறோம். ஆனால், நிஜத்தில் இப்படி ஒரு விஷயம் நடிகை நமிதாவிற்கு நடந்து இருக்கிறது. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : டான்ஸ் மாஸ்டர் கூட step miss பண்ணலாம் ஆனா இந்த மனுஷன் – விஜய்யை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

- Advertisement -

நமீதாவை கடத்திய ரசிகர் :

பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார். ஆனால், உடல் எடை கூடியதால் இவருக்கு சினிமாவில் மீண்டும் வாய்ப்புகள் அமையவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை நமீதா சினிமாவிற்கு வந்த புதிதில் ரசிகர் ஒருவரால் காரில் கடத்தப்பட்டதாக அப்போது ஒரு செய்தி பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பிதாமகன் படத்தில் இடம்பெற்ற காட்சி :

இதே போல ஒரு காட்சி தான் பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் கூட வரும். அந்த படத்தில் நடிகையாக இருக்கும் சிம்ரன் படப்பிடிப்பிற்காக வரும் போது அவரை சூர்யா காரில் கடத்தி செல்வார். பின்பு ஊர் மக்களுக்கு முன் அவரை நடனமாட வைப்பார். ஆனால், அவர் மீது சிம்ரன் எந்த புகாரையும் கொடுக்க மாட்டார். இதே போல தான் நமிதாவின் வாழ்விலும் நடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

நமீதா சொன்ன ஷாக்கிங் ஸ்டோரி :

இதுகுறித்து நமீதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். நமீதா ஒரு கடை திறப்பிற்காக தனது மேனேஜருடன் திருச்சிக்கு சென்று இருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் நமீதாவை பிக்கப் செய்ய ஒரு கார் வந்து இருக்கிறது. அதை ஓட்டி வந்த நபர் நான் தான் உங்களை அழைத்து செல்ல வந்தவர் என்று கூறி காரில் அழைத்து சென்று இருக்கிறார். பின்னர் காரில் சென்ற போது நமீதாவின் மேனேஜருக்கு சந்தேகம் எழ அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.

ரசிகர் சொன்ன வாக்குமூலம் :

பின்னர் ஹோட்டலை சென்று அடையும் போது அங்கு போலீசார் அந்த நபரை கைது செய்து இருக்கின்றனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது அவர் நமீதாவின் ரசிகர் என்று சொல்லி இருக்கிறார். நமீதா சொன்ன இந்த வீடியோவை பார்க்கும் போது பிதாமகன் தான் நினைவிற்கு வருகிறது. ஏனெனில் அந்த படத்தில் நமீதாவை போலவே தான் சிம்ரனும் இந்தி கலந்த ஒரு தமிழில் பேசி இருப்பார். ஒரு வேலை நமீதாவின் வாழ்வில் நடந்ததை தான் பாலா இப்படி வைத்துவிட்டாரோ.

Advertisement