4 ஆண்டுகளாக சினிமாவில் பிரேக் எடுத்துள்ள லட்சுமி மேனன். ரசிகருடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்.

0
3015
- Advertisement -

தென்னிந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

-விளம்பரம்-

இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார். நடிகை லட்சுமி மேனன் சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : விஜய்யின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்த முதலமைச்சர். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

தற்போது இவர் சோஷியாலஜி பட்டப் படிப்பை படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். படிப்பை முடித்து விட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகை லட்சுமி மேனன் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் படு ஸ்லிம்மாக உள்ளார். சினிமா துறைக்குள் நுழையும் போது லட்சுமி மேனன் அவர்கள் கன்னம் எல்லாம் கொழு கொழுவென்று இருந்தது.

இதனால் தான் தன் படம் வாய்ப்பு குறைந்து இருக்குமோ என்று எண்ணி தான் லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய உடல் எடையை குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இப்போ லட்சுமி மேனன் படு ஒல்லியாக பார்க்கவே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் இதனை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இனிமேல் ஆவாது லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு உள்ளார்கள். தற்போது லட்சுமி மேனன் அவர்கள் இயக்குனர் முத்தையா இயக்கும் புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிப்பாய் என்று பெயர் வைத்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : கல்லூரி படிக்கும் போது சக தோழிகளுக்கு மத்தியில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்.

கௌதம் கார்த்திக் மற்றும் லட்சுமி மேனன் நடிக்கும் இந்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் வெளியாகும் சந்தோஷத்தில் உள்ளார்கள். ஏற்கனவே நடிகை லக்ஷிமி மேனன் அவர்கள் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக கொம்பன் படத்திலும், சசிகுமார் ஜோடியாக குட்டிப்புலி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement