பத்தாங் கிளாஸ் போற மாதிரி ஆகிட்டிங்க – லட்சுமி மேமனின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

0
1754
Lakshmi Menon
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

🤓

A post shared by 𝐋𝐚𝐤𝐬𝐡𝐦𝐢 𝐌𝐞𝐧𝐨𝐧 (@lakshmimenon967) on

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

- Advertisement -

நடிகை லட்சுமி மேனன் சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.தற்போது இவர் சோஷியாலஜி பட்டப் படிப்பை படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் லட்சுமி மேனனின் சில லேட்டஸ்ட் புகைடபங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள். ஒரு சிலரோ யாருப்பா இது? பத்தாங் கிளாஸ் போற மாதிரி ஆகிட்டிங்க என்று வியந்து போய்யுள்ளனர்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனன் பேசுகையில், ‘‘எப்படி ஸ்லிம் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. நிறைய டான்ஸ் பண்ணினேன். ஆனா, எடை குறைக்கணும்கிறதுக்காக டான்ஸ் பண்ணல. அதுவா குறைஞ்சுடுச்சு. எப்போவுமே நல்லா சாப்பிடுவேன். அதுல எந்தக் குறையும் வச்சது இல்லை என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன்.

-விளம்பரம்-
Advertisement