தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமாவில் இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். ஆந்திர புயலான மந்த்ராதமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுகு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களிலும் பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் 1986 ஆண்டு ஒரு தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதன் பின்னர் 19 வயதில் தமிழில் அஜீத் நடித்த ரெட்டை ஜட வயசு, விஜய்யின் லவ் டுடே போன்ற முன்னணி இளம் நடிகர்களுடன் ஒருகாலத்தில் ஜோடியாக நடித்த இவர் தமிழில் பிரியம் கங்கா கௌரி தேடினேன் வந்தது கல்யாண கலாட்டா போன்ற 30க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த மந்த்ரா, சிம்புவின் வாலு, ஜீவாவின் கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். பின்னர் இவர் தனது 29 வயதில் ஸ்ரீமுனி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் மந்தாராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்குப் பிறகு தமிழில் ஒன்பதுல குரு படத்தில் நடித்தவர் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு திரைப்படத்திலும் சின்ன வேடம் ஒன்றிலும் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை முழுக்கு போட்டார் மந்த்ரா. சமீபத்தில் அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ராசி மந்த்ரா-வா இது என்று ஷாக் ஆகிதான் கிடந்தார்கள். தமிழில் வாய்ப்பு குறைந்தாலும் அம்மணிக்கு தெலுங்கு சினிமா நன்றாகவே கை கொடுத்தது இறுதியாக தெலுங்கில் வெளியான மேன் ஆப் தி மேட்ச் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் மந்த்ரா சற்று உடல் எடை குறைந்து காணப்பட்டால் அதே போல அடிக்கடி டிவி தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றியும் வந்தார்.
கடந்த சில ஆண்டுக்கு முன்னர் கலர்ஸ் நிறுவத்தாள் மந்த்ராவிற்கு பிரச்னையை ஏற்பட்டது. உடல் குறைப்பு சிகிச்சை மையமான இந்த கலர்ஸ் நிறுவனத்தை நடத்துபவர் நடிகை மந்த்ராவின் உறவினர் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.மேலும் இந்த கலர்ஸ் நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் முழுக்க உள்ளது இந்த நிறுவனம் கணக்கிலடங்காத அதிக சொத்துக்களை வைத்திருப்பதாக வருமான வரித்துறையினர் தகவல்கள் கிடைத்தது.
இதனால் ஆந்திராவில் உள்ள கலர்ஸ் நிறுவனத்தின் கிளைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திஇருந்தனர். அதேபோல நடிகை மந்த்ராவின் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தினர்.இதே கலர்ஸ் விளம்பரத்தில் பிரபல நடிகைகளான கௌசல்யா நிரோஷா ரம்பா மும்தாஜ் ஷெரின் பிரியாமணி என்று பலரும் நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.