‘மிக விரைவில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள்’ – 13வது திருமண நாளில் கணவர் குறித்து மீனா போட்ட உருக்கமான பதிவு.

0
806
meena
- Advertisement -

திருமண நாளை முன்னிட்டு மீனா போட்டுள்ள உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்திருக்கிறது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. பெங்களூரில் அவருடைய வீட்டுக்கு பக்கத்தில் நிறைய புறாக்கள் வளர்க்கப்படுகிறது. அதன் அலர்ஜி ஏற்பட்டு சுவாச பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது.அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த பாதிப்பு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. பின் சிகிச்சைக்கு பிறகு கொரோனா தொற்று சரியானாலும் நுரையீரல் பிரச்சனை வித்யாசாகருக்கு இருந்துகொண்டேதான் இருந்ததுஇதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆரம்பத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : இந்த டைலாக் கேக்குதா சமந்தா – நாக சைதன்யா பட ட்ரைலரால் சமந்தாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

உடல் உறுப்பு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் :

அதற்கு மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து நுரையீரல் தானம் கிடைக்கறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.ஆனால், உறுப்புக்கள் கிடைப்பதில் தாமதமானதால் அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்திடலாம் என்று முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் நாளுக்கு நாள் வித்யாசாகர் உடல்நிலை மோசமடைந்தது. இறுதியில் இவர் காலம் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிரபலங்கள் ஆறுதல் :

வித்யாசாகரின் இறப்பிற்கு ரஜினி, கலா மாஸ்டர், சுந்தர் சி, ரம்பா, குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இது ஒருபுறம் இருக்க தன் கணவரின் இறப்பிற்கு பின்னர் முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் மீனா அதில் ‘எனது அன்புக் கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் கலவலையடைந்து இருக்கிறேன். இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீனா வைத்த வேண்டுகோள் :

இந்த விஷயத்தில் இதற்கு மேல் தவறான தகவல்களை வெளியிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.இந்தக் கடினமான நேரத்தில் எனக்கு உதவி செய்து என்னுடைய குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடைசி வரை முயன்ற மருத்துவ குழுவிற்கும் முதலமைச்சருக்கும், சுகாதார துறை அமைச்சருக்கும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகம் மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

மீனாவின் திருமண நாள் பதிவு :

இப்படி ஒரு நிலையில் மீனாவிற்கு நேற்று மீனாவின் திருமண நாள். ஆனால், நேற்று எந்த பதிவையும் போடாத மீனா, இன்று தன் கணவரின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பதிவி ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘நீங்கள் எங்களின் அழகான ஆசீர்வாதமாக இருந்தீர்கள், ஆனால் மிக விரைவில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள். என்றும் எங்கள் மனதில் நீங்கள் இருப்பீர்கள். அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பியதற்காக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நல்ல இதயங்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்களுக்கு அவர்கள் கண்டிப்பாக தேவை. எங்கள் மீது அன்பும் அக்கரையையும் பொழியும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அன்பை உணர்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement