அவர்களுக்கு கட்டாய கொரோனா சோதனை செய்யப்பட வேண்டும் – எஸ்.ஜே. சூர்யா பட நாயகி நிலா அறிவுறை.

0
1061
meerachopra
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,84,795 என்ற அளவிற்கு உயர்ந்து உள்ளது. அதிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,52,225 என்ற அளவில் அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதால் உலக அளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு கூடிக்கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரங்கால் நாடு முழுவதும் அனைத்து விதமான படப்பிடிப்பு, கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

-விளம்பரம்-

அந்த வகையில் உள்நாட்டு விமான சேவைகள் நேற்று முன்தினம் முதல் செயல் படுத்தப்பட்டது. மேலும், விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும். கட்டாயமாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். இந்த விதிகளின் படி தான் பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விதிகளை குறித்து எஸ்.ஜே. சூர்யா படத்தின் கதாநாயகி நிலா என்கிற மீரா சோப்ரா அவர்கள் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, விமானத்தில் செல்லும் ஒவ்வொரு பயணிகளுக்கும் கட்டாயம் கோவிட் 19 சோதனை செய்யப்பட வேண்டும். அதிக ஆபத்து உள்ள இந்த இக்கட்டான காலங்களில் நீங்கள் விமானத்தில் பயணிக்கிறீர்கள் என்றால் மற்றவர்களை ஆபத்தில் சிக்க வைக்க கூடாது.

உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள் என கூறி உள்ளார். இப்படி நடிகை நிலா பதிவிட்ட கருத்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 2005 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த அன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா. இவர் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின் தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கி உடன் இவர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

-விளம்பரம்-
Advertisement