ஊரடங்கால் நிதி நெருக்கடி. 25 வயது இளம் டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை. அவரின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு.

0
14082
actress
- Advertisement -

இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு கூடிக்கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்க இன்னொரு புறம் திரையுலக பிரபலங்களின் மறைவு குறித்த செய்திகள்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற வைக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை ஒருவர் ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரைம் பேட்ரோல், லால் இஷ்க் உள்ளிட்ட பல பாலிவுட் டிவி தொடர்களில் நடித்தவர் நடிகை ப்ரெக்ஷா மேத்தா (Preksha Metha). இவர் டிவி தொடர்களின் முலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் அக்ஷய் குமாரின் பேடுமேன் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

- Advertisement -

இவர் மத்திய பிரேதச மாநிலம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு (25/05/2020) தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவருக்கு வயது 25 தான் ஆகிறது. மேலும், இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இவருடைய குடும்பத்துக்கு மறுநாள் தான் தெரியந்துவள்ளது. அதோடு இவரின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

அவர் தற்கொலை செய்தவற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ஃபியை பகிர்ந்து ஹிந்தி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார். நடிகை பிரேக்ஷா மெஹ்தா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், நடிகை ப்ரெக்ஷா மேத்தா ஊரடங்கால் ஏற்பட்ட நிதிநெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement