தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்தார். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை மேக்னாராஜ்ஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா அவர்கள் திடீரென்று மரணம் அடைந்துள்ளார்.
இந்த தகவல் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை மேக்னா ராஜ் அவர்கள் நீண்ட காலமாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 6) சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார்.
தற்போது இவருக்கு 39 வயது தான் ஆகிறது. மேலும், இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் ஆவார். இதில் சோகம் என்னவென்றால் நடிகை மேக்னா முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து இருக்கிறார். முதல் குழந்தையை பார்ப்பதற்குள் நடித்தார் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார். சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.