முதல் படத்தின் போது எனக்கு 15 வயசு தான், சாக்லேட் கொடுத்த அத பண்ண வச்சாங்க – மோகினி

0
464
Mohini
- Advertisement -

எனக்கு சாக்லேட் கொடுத்து தான் படத்தில் நடிக்க வைத்தார்கள் என்று நடிகை மோகினி நடித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருந்த 90ஸ் நடிகைகளை இன்றளவும் கண்டிப்பாக மறக்க முடியாது. ஆனால், 90ஸ் கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த பல நடிகைகள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த வரிசையில் நடிகை மோஹினியும் ஒருவர்.

-விளம்பரம்-

மோஹிணி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன் இவர் 1978 ஜூன் 9ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர். 1991 ஆண்டு ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் புதிய மன்னர்கள் , நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன், சின்ன மருமகள், உடன் பிறப்பு, கண்மணி, ஜாமீன் கோட்டை, அந்த நாள், சேரன் சோழன் பாண்டியன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

நடிகை மோஹினி திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு. கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவர் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் ஒரு தொலைக்காட்சி தொடரில் கூட நடித்து இருக்கிறார். அது சன் தொலைக்காட்சியில் 96 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘காதல் பகடை’ என்ற தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் 2006 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜராஜேஸ்வரி’ என்று தொடரிலும் நடித்து இருந்தார்.

mohini

மோஹினி திருமணம்:

அதன் பின்னர் இவரை எந்த சினிமாவிலும், சீரியலில் கூட காண முடியவில்லை. பின் இவர் 1999ஆம் ஆண்டே ‘பரத்’ என்ற ஒரு பிசினஸ் மேனை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பின் நீண்ட இடைவெளிக்கு பின் மோஹினி கடைசியாக 2011ல் கலெக்டர் என்ற ஒரு மலையாள படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவரை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை.

-விளம்பரம்-

மோஹினி பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு மோகினி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் முதன் முதலாக ஈரமான ரோஜாவே என்ற படத்தில் தான் நடித்திருந்தேன். அப்போது எனக்கு 15 வயது. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறை நேரத்தில்தான் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு 5 ஸ்டார் சாக்லேட் கொடுத்து தான் நடிக்க வைத்தார்கள். மேலும், என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவே யோசித்து நடித்தது என்றால் புதிய மன்னர்கள் படத்தில் வந்த கட்டும் சேலை மடிப்பில் என்ற பாடல் தான்.

சினிமா அனுபவம் குறித்து சொன்னது:

அந்த பாட்டு எனக்கு வேண்டாம். நான் நடிக்க மாட்டேன் வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருந்தேன். விக்ரமனிடம் கூட இது குறித்து பேசினேன். ஆனால் அவர், நீங்க பண்ணுனா நல்லா இருக்கும் என்று சொன்னார். அந்த நேரத்தில் இந்த மாதிரி கிராமத்து பாணியில் உடை அணிந்து டான்ஸ் ஆட தெரியாது. அப்போது அந்தப் பாட்டுக்கு ஷூட்டிங்கில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது கூட எனக்கு அந்த டான்ஸ் வராமல் நான் ஏதோ பரதநாட்டியம் ஆடுவது போன்று ஏனோ தான் ஆடி முடித்தேன். ஆனால், பாட்டு வெளியான பிறகு தான் எனக்கு விக்ரமன் சொன்னது சரி என்று தெரிந்தது. என்னுடைய கண்ணை பார்த்து பலரும் அழகா இருக்கிறது என்று சொன்னார்கள். இந்த கிராமத்து பாடலுக்கு என்னுடைய கண் செட்டாகுமா? என்று நினைத்தேன். கடைசியில் அவ்வளவு அழகாக அந்த பாட்டு இருந்தது என பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement