உதவி இயக்குனரை திருமணம் செய்யப்போகும் நடிகை மிருதுளா. புகைப்படங்கள் இதோ.

0
3229
Mrudula-Murali
- Advertisement -

பிரபல நடிகை மிருதுளா முரளி நிச்சயதார்த்தம் நேற்று கொச்சியில் நடை பெற்று உள்ளது. மேலும், இவர்கள் திருமண தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவர் சிறு வயதிலேயே ஜீவன் டிவி என்ற சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை தனது சகோதரன் உடன் இணைந்து தொகுத்து வழங்கி உள்ளார். இதைத் தவிர நிறைய விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் Kappa டிவியில் அசோசியேட் தயாரிப்பாளராகவும் இவர் பணி புரிந்து இருக்கிறார். இதற்கு பிறகு தான் இவருக்கு சினிமா உலகில் பட வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் ‘ரெட் சில்லீஸ்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறியப்பட்டவர் நடிகை மிருதுளா முரளி. இவர் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவு பாராட்டை பெற்றார்.

-விளம்பரம்-
Image result for mrudula murali

- Advertisement -

பின்னர் இவர் தமிழில் தமிழில் “நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் பகத் பாசிலுடன் ‘அயாள் நிஜனல்ல’ என்ற மலையாள படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகை மிருதுளா அவர்கள் அதிகமாக பாராட்டப்பட்டார். ஹிந்தியில் இவர் ‘ரத்தேஷ்’ என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று நாயகியாக வலம் வந்து இருக்கிறார் நடிகை மிருதுளா. நடிகை மிருதுளா மற்றும் உதவி இயக்குனர் நிதின் மாலினி விஜய் ஆகிய இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : வலிமை படப்பிடிப்பிற்கு இத்தனை கிலோமீட்டர் சைக்கிளில் சென்றாரா அஜித் ? வைரலாகும் புகைப்படம்.

நிதின் அவர்கள் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை இரு வீட்டாரிடம் சொல்லி இவர்கள் திருமணத்துக்கு சம்மதம் வாங்கி உள்ளார்கள். பின்னர் இவர்கள் கொச்சியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள். அதுமட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள், நடிகைகள் ரம்யா நம்பீசன், சரண்யா மோகன், பாவனா உள்ளிட்ட பல பேர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-
உதவி இயக்குனர்

தற்போது இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இவர்கள் திருமணம் தேதி குறித்து இன்னும் எந்த முடிவு செய்யவில்லை. அதோடு திருமணத்தை பிறகும் நான் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை மிருதுளா தெரிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷி. மேலும், இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement